திருவள்ளூர், திருவள்ளூர் மாவட்டம் கூடப்பாக்கம் பகுதியில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் உள்ளது. இந்த ஏ.டி.எம். மையத்தில் இருந்து மர்ம நபர்கள் சிலர் பணத்தை கொள்ளையடிக்கும் முயற்சியில், அங்கிருந்த ஏ.டி.எம். இயந்திரத்தை பெயர்த்து எடுத்து கொண்டு சென்றுள்ளனர். அந்த ஏ.டி.எம். இயந்திரத்தில் சுமார் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் பணம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்ததோடு, மோப்பநாய்கள் உதவியோடு கொள்ளையர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/thiruvallur-thieves-make-off-with-atm-police-conduct-intensive-investigation-with-the-help-of-a-sniffer-dog




