வங்கிக் கணக்கு விஷயத்தில் முக்கியமான விதிமுறைகளை அவ்வப்போது ரிசர்வ் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு நினைவுபடுத்துகிறது. அந்த வகையில், வாட்ஸ் அப் வாயிலாக வாடிக்கையாளர்களுக்கு ரிசர்வ் வங்கி மெசேஜ் ஒன்றை அனுப்பி வருகிறது. அந்த மெசேஜில் வங்கி கணக்கு வைத்து இருப்பவர்கள் இறந்துவிட்டால், அவரது கணக்கில் இருக்கும் பணம் என்ன ஆகும்? உறவினர்கள் அதை உரிமை கோர முடியுமா? அதற்கான வழிமுறைகள் என்ன? என்பது பற்றிய விவரங்களை தெளிவுப்டுத்தியதுள்ளது. ரிசர்வ் வங்கி இது தொடர்பாக வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: வங்கி கணக்கு வைத்திருப்பவர் இறந்தபின், வங்கிக் கணக்குகளில் வைத்திருக்கும் தொகை என்ன ஆகும்? அத்தகைய கணக்குகளில் உரிமை கோரும் முறை இப்போது மிகவும் எளிமையாகவும் காலக்கெடுவுடனும் செய்யப்பட்டுள்ளது! இந்த 3 படிகளைப் பின்பற்றுங்கள்: (1) உங்கள் வங்கியின் கிளை அல்லது வங்கி இணையதளத்திற்குச் செல்லுங்கள் (2) உரிமை கோரும் படிவத்தைப் பூர்த்தி செய்யுங்கள் (3) தேவையான அனைத்து ஆவணங்களுடனும் அதைச் சமர்ப்பிக்கவும் 15 நாட்களுக்குள் கோரிக்கைத் தீர்வு கணக்கில் நியமனதாரர்/நியமனதாரர்கள் இருந்தால், இந்தச் செயல்முறை இன்னும் விரைவாகவும் எளிதாகவும் முடியும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கு உரிமை கோரும் செயல்முறையை எளிதாக்க, இன்றே உங்கள் வங்கிக் கணக்கில் நியமனதாரர்/நியமனதாரர்கள் விவரங்களை பதிவு செய்யுங்கள். மேலும் தகவலுக்கு இங்கே கிளிக் செய்யவும்: இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/india/what-happens-to-the-money-if-a-bank-account-holder-passes-away-guidelines-issued-by-the-reserve-bank




