தூத்துக்குடி மாவட்டம், குதிரைமொழி தேரிப் பகுதியில் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை சிகப்புக் கம்பளம் விரித்தாற்போல் செம்மண் மேடுகள், மணல் குன்றுகளும் நிறைந்து காணப்படுவதுதான் இந்த தேரிக்காடு. தமிழகத்தில் எங்குமே அமைந்திடாத இந்த தேரி மணல்பகுதிகளை பாதுகாத்திட வனத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. திருச்செந்தூர், சாத்தான்குளம் பகுதியிலுள்ள தேரிக்காட்டு செம்மணலுக்கென்று பல்வேறு தனிச்சிறப்புகள் உள்ளன. இந்த தேரி மணலில் கார்னெட், இல்மனைட், இருட்டைல், சிலிக்கான், டைட்டானியம் என விலை மதிக்க முடியாத கனிம வளங்கள் கொட்டிக் கிடக்கிறது. கார்கள் சாகசம் தனித்துவமான நிலப்பரப்பு கொண்ட குதிரைமொழி தேரி மற்றும் சாத்தான்குளம் தேரி ஆகிய இரண்டும் ஒன்றுக்கொன்று சுமார் 35கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளன. இந்த பகுதிகளிலுள்ள செம்மண் தேரி காடுகளை வனவிலங்கு சரணாலயமாக அறிவிக்க வனத்துறை முன் வந்துள்ள நிலையில் இங்குள்ள உயிரினங்களைப் பாதுகாப்பதே இதன் நோக்கமாகும். சுற்றுச்சூழலையும், தேரிக்காடுகளின் தாவரங்கள் மற்றும் விலங்கினங்களையும் பாதுகாப்பதற்காக 'சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலம்' உருவாக்குவதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த தேரிப்பகுதிகளில் அழிந்து வரும் இனமான ‘முள்ளெலி' இனம் தற்போது தேரிப் பகுதிகளில் மட்டுமே காணப்படுகிறது. பறக்கும் பல்லிகள் இனங்கள், அரிய வகைப் பூச்சியினங்கள், வண்டு இனங்கள், அபூர்வமான பறவைகள், பாம்பு வகைகள் உள்ளிட்ட பல அரிய வகை உயிரினங்களின் வாழ்விடமாகவும் திகழ்கிறது. அணிவகுத்த கார்கள் இந்த வனப்பகுதிக்குள் யாரும் அத்துமீறி நுழைய முடியாத வண்ணம் வனப்பாதுகாவலர்கள் ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதனையும் மீறி சமூகவலைதளங்களில் பகிங்கிரமாக சகாசத்தில் சிலர் ஈடுபட அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் ஏராளமான சொகுசு கார்களில் பாதுகாக்கப்பட்ட தேரிப்பகுதியில் சகாசத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்த வீடியோக்கள் சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில் அதனை கண்டித்து பல்வேறு விமர்சனங்களும் தெரிவித்து வருகின்றனர். சுமார் 25-க்கும் மேற்பட்ட சொகுசு கார்களில் வரிசையாக குவிந்து காணப்படும் மணல் மேடுகளில் தொடர்ந்து சகாசங்களில் சகாசத்தில் ஈடுபட்டது வனத்துறையினரின் ஆசியுடன் நடந்ததா அல்லது வனத்துறையினருக்குத் தெரியாமல் நடந்ததா என்ற கேள்வி எழுந்துள்ளது. வழக்கமாக தேரிப்பகுதியில் அமைந்துள்ள சாலையில் பயணிக்கும் போது சாலையோரம் டூவிலர், கார் என எந்த வாகனத்தை நிறுத்தியிருந்தாலும் உடனே எடுத்துச் செல்லுங்கள் என மிரட்டும் தொனியில் வனவர்கள் கூறுவர். தேரி மணலில் சிக்கிய கார் ஆனால், அதையும் மீறி ஏராளமானவர்கள் தேரிப்பகுதிக்குள் பயணிப்பது உண்டு. ஆனால் பாதுகாப்பட்ட இந்த அடர்ந்த வனப்பகுதியில் 25க்கும் மேற்பட்ட சொகுசு கார்களை அனுமதித்தது யார்? சகாசத்தில் ஈடுபட்ட போது கூட வனத்துறையினர் கண்ணில் படவில்லையா? என பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. இந்த பாதுகாக்கபட்ட வனப்பகுதியையொட்டி சுமார் 40-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த பகுதிமக்களில் பெரும்பாலானவர்கள் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு சார்ந்த தொழிலைச் செய்து வருகின்றனர். இந்த கால்நடைகள் மேய்ச்சலுக்காக தடம் மாறி தேரிப்பகுதிக்கு செல்லும் போது கால்நடைகளின் பின் தொடர்ந்து செல்வார்கள். கார்கள் சாகசம் ஆடு, மாடு போன்ற அந்த கால்நடைகள் யார் வீட்டிற்கு செல்கிறதோ அவர்களின் கால்நடை என்பதை உறுதிப்படுத்தி அல்லது அதனை பிடித்துச் சென்று வனத்துறை அலுவலகத்தில் வைத்து அபாராதம் விதிப்பதை வாடிக்கையாக கொண்ட வனத்துறை அதிகாரிகள், இந்த கார் சாகச விவகாரத்தில் கோட்டை விட்டது ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதுகுறித்து திருச்செந்தூர் வனச்சரக அதிகாரிகள் தரப்பில் பேசினோம், “கார் சாகசம் குறித்து கார்களின் பதிவெண்ணை வைத்து கணக்கெடுத்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம்” என்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.vikatan.com/environment/car-stunts-in-the-protected-semman-theri-area-of-thoothukudi



