சென்னை, தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது. கடந்த 25-ம் தேதி தங்கம் விலை சற்று அதிகரித்து காணப்பட்டது. அதன்படி, கிராமுக்கு ரூ.10-ம், பவுனுக்கு ரூ.80-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 10-க்கும். ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 12 ஆயிரத்து 80-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று முன்தினம் கிராமுக்கு ரூ.10-ம், பவுனுக்கு ரூ.80-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்துக்கும், ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 12 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது. விடுமுறை தினமான நேற்று தங்கம் விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்துக்கும், ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 12 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி ஒரு கிராம் ரூ.250-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் விற்கப்பட்டது. தங்கம் விலை இந்த நிலையில், தங்கம் இன்று அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.1,880 குறைந்து ஒரு பவுன் ரூ.1,10,120-க்கும், கிராமுக்கு ரூ.235 குறைந்து ஒரு கிராம் ரூ.13,765-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி விலை தங்கம் விலை குறைவுக்கு இணையாக, இன்று வெள்ளி விலையும் குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.5 மற்றும் ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.5,000 குறைந்து, தற்போது ஒரு கிராம் வெள்ளி ரூ.245-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2 லட்சத்து 45 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/business/gold-rate-chennai/gold-price-dropped-by-rs-1880-per-sovereign




