டமாஸ்கஸ் சிரியாவில் பிரான்ஸ் நாட்டு ஜனாதிபதி தங்கியிருந்த ஓட்டல் அருகே அடுத்தடுத்து குண்டுவெடிப்புகள் நடந்துள்ளன. சிரியாவில் பல ஆண்டுகளாக நடந்த உள்நாட்டு போரால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி இருக்கின்றனர். இந்த சூழலில், அந்நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை மற்றும் அமைதியை மீட்டெடுப்பதற்கான முயற்சிக்கு ஆதரவு அளிப்பதன் ஒரு பகுதியாக, அதனை தெரிவிப்பதற்காக பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் அந்நாட்டுக்கு பயணம் செய்துள்ளார். குண்டுவெடிப்புகள் சிரியா நாட்டுக்கு அவர் மேற்கொண்டுள்ள முதல் பயணம் இதுவாகும். அவர் தலைநகர் டமாஸ்கஸ் நகரில் உள்ள ஓட்டல் ஒன்றில் தங்கியுள்ளார். இந்த சூழலில், அவர் தங்கியிருந்த ஓட்டல் அருகே இன்று திடீரென அடுத்தடுத்து குண்டுவெடிப்புகள் நடந்துள்ளன. இதனால் அந்நாட்டில் பதற்றம் ஏற்பட்டு உள்ளது. இந்த குண்டுவெடிப்பு தாக்குதல்களுக்கான காரணம் பற்றி உடனடியாக தெரிய வரவில்லை. உயிரிழப்புகள் பற்றிய விவரங்களும் வெளிவரவில்லை. எனினும், 18 பேர் காயம் அடைந்தனர். இதனை தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள சாலைகளை போலீசார் மூடி, தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்றும் வைரலாகி வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/world/syria-explosion-near-french-presidents-hotel-raises-tensions




