சூர்யாவின் 'விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 14-ம் தேதி திரைக்கு வருகிறது. 'லக்கி பாஸ்கர்' வெங்கி அத்லூரி இயக்கும் இந்தப் படத்தில் மமிதா பைஜூ, ராதிகா சரத்குமார் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கோவை இந்துஸ்தான் கல்லூரியில் நடைபெற்றது. Viswanath & Sons Audio Launch இந்த நிகழ்வில் பேசிய நடிகர் சுனில் ரெட்டி, "சூர்யா சாருக்கும் எனக்குமான நட்பு 25 வருஷத்துக்கு முன்னாடி இருந்தே இருக்கு. 'விஸ்வநாத் & சன்ஸ்' படத்துக்கு அவருக்கு 90 நாள் ஷூட்டிங் நடந்தது. நான் அவர் கூட 75 நாள் ஒண்ணா வொர்க் பண்ணியிருக்கேன். மமிதா பைஜூ செட்ல இருந்தாலே எனர்ஜிதான்" எனப் பேசினார். அவரைத் தொடர்ந்து அருண்ராஜா காமராஜ் பேசுகையில், "என்னோட லைஃப்ல இந்த பெரிய ஈவென்ட்டை முதல் முதல்ல கொடுத்து, பாடலாசிரியரா வாய்ப்புக் கொடுத்தது ஜி.வி. சார் தான். நான் டைரக்டரா இருக்குறப்போ எனக்கு பாடலாசிரியராக வாய்ப்புக் கொடுத்ததும் ஜி.வி. சார் தான். என்னை ஜி.வி. சார் முழுசா நம்புவாரு. 'ஃபையர் விடுற பாட்டுலாம் வேணாம், பட்டாம்பூச்சி மாதிரியான பாட்டு குடு'னு ஜி.வி. சொன்னாரு. அதுதான் 'பட்டாம்பூச்சி' பாடல். Arunraja Kamaraj - Viswanath & Sons Audio Launch நான் சினிமாவில் டைரக்டர் ஆகணும்னு ஆசைப்பட்டதுக்கு பெரிய காரணம் சூர்யா சார் நடிச்ச 'ஆய்த எழுத்து' படம்தான். எல்லா நேரமும் எனக்கு இன்ஸ்பிரேஷனா இருக்குறது சூர்யா சார்தான். எனக்கு மட்டும் இல்ல, எல்லாருக்குமே சூர்யா சார் இன்ஸ்பிரேஷன்தான். இந்தப் படம் எனக்கு முக்கியமான படம். காலேஜ் படிக்கிறப்போ சூர்யா சார் லுக்கெல்லாம் இமிடேட் பண்ணுவேன். எல்லோரும் ஹீரோதான்னு எண்ணத்தையும் நம்பிக்கையையும் உருவாக்கியவர் அவர்தான்." என்றார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://cinema.vikatan.com/kollywood/suriya-viswanath-and-sons-audio-launch-arunraja-kamaraj-speech




