அங்காரா, துருக்கியில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஊடுருவி பயங்கரவாத தாக்குதலுக்கு சதி திட்டம் தீட்டி வருவதாக அந்த நாட்டின் உள்துறை அமைச்சகத்துக்கு துப்பு கிடைத்தது. இதன்பேரில் உள்துறை அமைச்சம் உளவுத்துறை, ராணு வம் உள்ளிட்டவற்றில் உள்ள சிறந்த அதிகாரிகளை கொண்டு தனிப்படை அமைக்கப்பட்டது. இஸ்தான்புல், அங்காரா உள்பட நாட்டின் 30 மாகாணங்களில் தனிப்படையினர் பயங்கரவாத தடுப்புச் சோதனைகளை ஒருங்கிணைத்து நடத்தினர். இந்த கூட்டு நடவடிக்கையில் 119 பேர் கைது செய்யப் பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் உறுப்பினர்களாக செயல்பட்டதும், சமூக வலைத்தளங்கள் மூலமாக ஐ.எஸ். அமைப்பின் பயங்கரவாத கொள்கைகளைப் பரப்பி, பிரசாரங்களில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/world/119-is-terrorists-arrested-in-turkey




