கோவை, உரிய நேரத்தில் தேர்வு நடத்தாததால் தொலைநிலைக்கல்வியில் படிப்பவர்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக பாரதியார் பல்கலைக்கழகத்தில் புகார் அளிக்கப்பட்டது. மாணவ- மாணவிகள் தமிழகம் முழுவதும் கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் தொலைதூரம், இணையவழி மற்றும் சான்றிதழ் படிப்புகள் என 14 ஆயிரம் பேர் படித்து வருகின்றனர். இதில் தொலைநிலைக் கல்வி முறையில் முதுநிலை பாடத்தில் சேர்ந்த பலருக்கும் உரிய காலத்துக்குள் தேர்வுகளை நடத்தப்படவில்லை என்று தெரிகிறது. இதனால் பாதிக்கப்பட்ட மாணவ-மாணவிகள், பாரதியார் பல்கலைக் கழக தேர்வுத்துறை அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை அளித்தனர். இது குறித்து மாணவர்கள் கூறியதாவது:- நாங்கள் தொலைநிலைக்கல்வி திட்டத்தில் 2024-ம் ஆண்டு ஜூலை மாதம் முதுநிலை படிப்பில் சேர்ந்தோம். எங்களுக்கு 14 மாதங்கள் கழித்து 2025-ம் ஆண்டு முதல் பருவத்தேர்வு நடத்தப்பட்டது. அதன்பிறகு கடந்த ஜூலை மாதம் 2-ம் பருவத்தேர்வு நடந்தது. தேர்வு நடத்த வேண்டும் தேர்வு அறிவிப்பில் தொடர்ந்து குழப்பம் நிலவி வருகிறது. அடுத்த மாதம் (செப்டம்பர்) 5-ந் தேதி 3-ம் பருவத்தேர்வு நடைபெறும் என்று பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. கடந்த காலங்களில் தேர்வு தேதி அறிவிக்கப்பட்டு, பின்னர் ஒத்தி வைத்தனர். மீண்டும் அதுபோன்று நடைபெறாமல் அறிவித்தபடி தேர்வு நடத்த வேண்டும். இதனால் 2 ஆண்டுகளில் முடிக்க வேண்டிய முதுநிலை படிப்பை 2.5 ஆண்டுகளாக படித்து வருகிறோம். இணையவழி வகுப்புகளும் சரிவர நடத்தப்படுவது இல்லை. இது குறித்து புகார் அளித்தாலும், பல்கலைக் கழக நிர்வாகத்தினர் முறையாக பதில் அளிப்பது இல்லை. இதனால் பலரும் கல்வியில் தங்களின் இலக்கை அடைய முடியாமல் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர். அறிவித்தபடி தேர்வு இது பற்றி பாரதியார் பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி இயக்குனர் ப.செல்லச்சாமி கூறுகையில், பாரதியார் பல்கலைக்கழகத்தில் 14 முதுநிலை படிப்புகள் உள்ளன. அதில் சேர்ந்து படிக்கும் மாணவர்களுக்கு தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. அதன்படி தேர்வுகள் நடத்தப்படும். கடந்த கால குளறுபடிகள் சரி செய்யப்பட்டு உள்ளன. 2026-ம் ஆண்டுக்குள் முதுநிலையில் தாமதம் ஏற்பட்ட படிப்புக்கான தேர்வுகள் முடிக்கப்பட்டு விடும். இணையவழி வகுப்புகளை அவ்வப்போது ஆய்வு செய்து வருகிறேன் என்றார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/students-complain-to-bharathiar-university-about-being-affected-by-not-conducting-exams-on-time




