கடந்த செப்டம்பர் 10-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை தொழில்முறை பயணத்திற்காக லண்டன் சென்றிருந்தார் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய். ‘முதலீட்டை ஈர்ப்பதற்காக’ என்று கூறப்பட்ட இந்தப் பயணத்தில் தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனா இல்லாதது விமர்சனங்களைக் கிளப்பியது. அவருக்கு உடல்நிலை சரியில்லை என்று பின்னர் கூறப்பட்டாலும், அது குறித்த எந்தத் தெளிவான விளக்கமும் அளிக்கப்படவில்லை. இந்த நிலையில், தான் ஏன் லண்டன் செல்லவில்லை என்பது குறித்து கீர்த்தனா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அமைச்சர் கீர்த்தனாவிக்கற விலைக்கு தங்கத்தில் முதலீடு செய்ய முடியவில்லை தானே; 'இந்த' உலோகத்துல பார்வையை திருப்புங்க! என்ன பிரச்னை? “கடந்த சில நாள்களாக, மாண்புமிகு முதலமைச்சரின் லண்டன் பயணத்தின்போது நான் கலந்துகொள்ளாதது குறித்தும், அதனைத் தொடர்ந்து எனது உடல்நலம் குறித்தும் பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. உண்மைகளை அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்வது அவசியம் என நான் கருதுகிறேன். செப்டம்பர் முதல் வாரத்தில், எனக்குக் கடந்த காலத்தில் ஏற்பட்ட ஒரு காயத்திற்காகப் பொருத்தப்பட்ட பழைய இம்ப்ளான்ட் காரணமாக வலியும் அசௌகரியமும் ஏற்படத் தொடங்கின. மருத்துவ ஆலோசனைக்குப் பிறகு, அது சிக்கல்களை ஏற்படுத்தத் தொடங்கியிருந்ததால், அந்த இம்ப்ளான்ட்டை அறுவை சிகிச்சை மூலம் அகற்றிவிட மருத்துவர்கள் அறிவுறுத்தினர். முன்பே செய்துகொள்ள. நான் ஆரம்பத்தில் இந்த அறுவை சிகிச்சையை முன்பே செய்துகொள்ளத் திட்டமிட்டிருந்தேன். ஆனால், செப்டம்பர் 9 அன்று ஹெச்டி ஹூண்டாய் குழுவினருடன் ஒரு முக்கியக் கூட்டம் திட்டமிடப்பட்டிருந்ததால், முதலில் அந்தப் பணியை முடித்துவிட முடிவு செய்தேன். செப்டம்பர் 10 அன்று எனக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது. அதன் பிறகு போதுமான ஓய்வும் மருத்துவப் பராமரிப்பும் எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டேன். ஒருவரின் உடல்நலம் என்பது முற்றிலும் தனிப்பட்ட விஷயம் என்று நான் நம்புவதால், இதை முன்பே வெளிப்படுத்த வேண்டாம் எனத் தீர்மானித்தேன். கீர்த்தனா அறிக்கைகீர்த்தனா அறிக்கைரூ.10,000 சம்பள பாக்கி; ரூ.150-க்கு பெட்ரோல் வாங்கி, ரூ.24 கோடி மதிப்பிலான பொருள்களை எரித்த தொழிலாளி மருத்துவமனையிலும், அதைத் தொடர்ந்து வீட்டிலும் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தபோது கூட, மாண்புமிகு முதலமைச்சரின் லண்டன் பயணம் தொடர்பான ஏற்பாடுகளையும் முதலீட்டுச் சந்திப்புகளையும் நான் தொடர்ந்து ஒருங்கிணைத்து வந்தேன். அறுவை சிகிச்சை முடிந்த நான்கே நாட்களில், நான் மீண்டும் பணிகளுக்குத் திரும்பினேன். மாநிலமே முதன்மை நான் நலமாக மீண்டு வருகிறேன். தமிழக மக்கள் எனக்கு அளித்த பொறுப்பின் மீது மட்டுமே எனது முழு கவனமும் உள்ளது. பொதுவாழ்க்கையில் விமர்சனங்கள் எப்போதும் இருக்கத்தான் செய்யும். மக்கள் சேவையில் இறங்கும்போது நாம் ஏற்றுக்கொள்ளும் பொறுப்பின் ஒரு பகுதிதான் அது. ஒருவரின் தனிப்பட்ட உடல்நலம் குறித்த ஊகங்கள், அவர்களின் பொதுப் பணியை மதிப்பீடு செய்வதற்கு மாற்றாக ஒருபோதும் மாறக்கூடாது. தமிழ்நாட்டுக்கு ஆற்ற வேண்டிய முக்கியமான பணிகள் இன்னும் நிறைய உள்ளன. முதலீடுகளைக் கொண்டுவர வேண்டும், வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும், தொழில்துறைகளை வளர்க்க வேண்டும், நமது இளைஞர்களுக்கான வாய்ப்புகளை வழங்க வேண்டும். அங்குதான் எனது கவனம் இருக்க வேண்டும். எப்போதும் மாநிலமே முதன்மை. - தமிழ்நாடு!” பாலியல் வழக்கு; ``தவெகவினருக்காக மட்டும் 'Compromise' செய்துகொள்கிறாரா முதல்வர்?" - டிடிவி தினகரன் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.vikatan.com/government-and-politics/tn-minister-keerthana-explains-why-she-missed-vijays-london-trip




