மதுரை, “என் பேரனைப் பார்க்க வேண்டும் என்று ரொம்ப ஆசைப்பட்டேன். எப்படியாவது என் பேரனைப் பார்க்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், பார்க்க முடியவில்லை. அடுத்த முறை கண்டிப்பாக நேரில் பார்க்க வேண்டும்” என்று ‘மெர்சல்’ சிட்டுக்குருவி பாட்டி தெரிவித்துள்ளார். ‘மெர்சல்’ படத்தில் விஜய்யுடன் நடித்தவர் தமிழ் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் துணை நடிகையாக நடித்து பிரபலமானவர் மதுரையை சேர்ந்த சீனியம்மாள் (சிட்டுக்குருவி பாட்டி). ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘நினைத்தாலே இனிக்கும்’ உள்ளிட்ட பல்வேறு தொடர்களில் நடித்துள்ளார். நடிகர் விஜய் நடிப்பில் வெளியான ‘மெர்சல்’ திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் இவர் பரவலாக அறியப்பட்டார். இதேபோல் அஜித் நடித்த ‘விஸ்வாசம்’ திரைப்படத்திலும் நடித்துள்ளார். மதுரை சென்ற முதல்வர் விஜய் தமிழக முதல்-அமைச்சர் விஜய் நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மதுரை சென்றிருந்தார். மதுரையில் நடைபெற்ற ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம் மற்றும் காந்தி அருங்காட்சியகம் திறப்பு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கும் சென்று சாமி தரிசனம் செய்தார். “என் பேரனைப் பார்க்க முடியவில்லை” இந்த நிலையில், மதுரைக்கு முதல்-அமைச்சர் விஜய் வந்திருந்தபோது அவரை நேரில் சந்திக்க முடியவில்லை என்று ‘சிட்டுக்குருவி பாட்டி’ வருத்தம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “என் பேரன் விஜய் முதலமைச்சராக இருப்பது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. என் பேரனைப் பார்க்க வேண்டும் என்று ரொம்ப ஆசைப்பட்டேன். ஆனால், என்னால் வர முடியவில்லை. எப்படியாவது என் பேரனைப் பார்க்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், பார்க்க முடியவில்லை. அடுத்த முறை கண்டிப்பாக நேரில் பார்க்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/cinema/cinemanews/i-couldnt-see-my-grandson-vijay-mersals-chittukuruvi-grandmother-speaks-poignantly




