வயது அதிகமாகும்போது சருமத்தில் சுருக்கங்கள் தோன்றுவது இயல்பானதுதான். ஆனால் இளம் வயதிலேயே பலரும் முதிய தோற்றத்திற்கு ஆளாகிறார்கள். சருமத்தில் சுருக்கங்கள் ஏற்பட்டு விரைவில் முதுமையான தோற்றம் ஏற்படும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். அதற்கு உணவுப்பழக்கமும் ஒருவகையில் காரணமாக அமைகிறது. ஏனெனில் நீர்ச்சத்து குறையும்போது சருமம் வேகமாக பொலிவிழந்து வயது முதிர்ச்சிக்கான அறிகுறிகளை வெளிப்படுத்த தொடங்கிவிடுகிறது. அதற்கு காரணமாகும் உணவுப்பொருட்கள் பற்றியும், அவற்றைத் தவிர்க்க வேண்டியதன் அவசியம் குறித்தும் பார்ப்போம். 1. சர்க்கரை பானங்கள்- இனிப்புகள் அதிகப்படியான சர்க்கரை சேர்க்கப்பட்ட இனிப்பு பொருட்கள் கொலாஜனை கடினமாக்கி சரும சுருக்கங்களை விரைவுபடுத்த துணை புரியும். சர்க்கரை பானங்களை பொறுத்தவரை சர்க்கரையுடன் அதிக கலோரிக ளையும் கொண்டிருக்கும். வாயில் உள்ள பாக்டீரியாக்கள் இந்த சர்க்கரையை அமிலங்களாக சிதைக்கும். அந்த அமிலங்கள் பற்களின் எனாமலை பாதிப்படைய செய்து வயதானவர் போன்ற தோற்றத்தை வெளிப்படுத்தும். 2. பால் பொருட்கள் பால் மற்றும் பால் பொருட்கள் ஆரோக்கியமானவை. இவை உடலுக்குத் தேவையான முக்கிய ஊட்டச்சத்துக்களை வழங்கினாலும், அவற்றின் தாக்கம் ஒவ்வொருவரின் உடலமைப்புக்கு ஏற்ப மாறுபடும். அளவுக்கு அதிகமான பால் மற்றும் பால் பொருட்கள் சிலருக்கு பருக்கள் அல்லது அரிப்பு போன்ற பிரச்சனைகளைத் தூண்டலாம். கொழுப்பு நிறைந்த வெண்ணெய், சீஸ் மற்றும் ஐஸ்கிரீம் போன்றவற்றை அதிகமாக உட்கொள்வது சிலருக்கு உடல் எடையை அதிகரிக்கச் செய்யும். எனவே, பால் மற்றும் பால் சார்ந்த உணவுகள் குறைவாக உள்ள உணவுமுறை, சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படும் அபாயத்திலிருந்து பாதுகாக்கும். 3. அதிக வெப்பத்தில் தயாரிக்கப்பட்ட இறைச்சி உணவுகள் கிரில், வறுத்தல், சுடுதல் என அதிக வெப்பத்தில் தயார் செய்யப்படும் இறைச்சி வகைகளை உட்கொள்வது சருமத்திற்கு பாதகமாகவே அமையும். குறிப்பாக பதப்படுத்தப்பட்ட இறைச்சி வகைகளை அதிக வெப்பத்தில் வறுத்தோ, சுட்டெடுத்தோ உட்கொள்வது மேம்பட்ட கிளைசேஷனை உற்பத்தி செய்யும். இந்த சேர்மங்கள் ஆன்டிஆக்சிடென்ட் அழுத்தத்தை ஊக்குவித்து, சருமத்தை பொலிவிழக்க செய்து அதன் நெகிழ்வுத்தன்மையையும் குறைக்கும். இதனால் சருமம் விரைவில் வயதான தோற்றப் பொலிவுக்கு மாறும். இதனை தவிர்க்க சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்க உதவிடும் பொருட்களை அதிகம் உட்கொள்ள வேண்டும். 4. சுத்திகரிக்கப்பட்ட மாவு மைதா போன்ற சுத்திகரிக்கப்பட்ட மாவில் தயாரிக்கப்படும் உணவுப்பொருட்களில் முழு தானியங்களில் காணப்படுவது போல் நார்ச்சத்தோ, ஊட்டச்சத்துக்களோ போதிய அளவில் இருப்பதில்லை. இவை இன்சுலின் அளவை வேகமாக உயர்த்தி உடல் முழுவதும் அழற்சியை உண்டாக்கி, சருமம் விரைவில் முதிர்வுத்தன்மைக்கு மாற வழிவகை செய்கின்றன. 5. அரிசி பிஸ்கெட், கேக்குகள் அரிசியில் தயாரிக்கப்பட்ட பிஸ்கெட், கேக்குகள் சிறந்த சிற்றுண்டிகளாக கருதப்பட்டாலும் அவை அதிக கிளைசெமிக் குறியீடுகளை கொண்டுள்ளன. அதனால் குளுக்கோஸை திடீரென அதிகரிக்க செய்துவிடும். ரத்தத்தில் சர்க்கரை அளவையும் வேகமாக உயர்த்தக்கூடும். மேலும் சருமத்தில் எண்ணெய் பசைத்தன்மையை சீரற்றதாக்கி, சருமத்தை மந்தமான தன்மைக்கு மாற்றிவிடும். சருமத்தின் பொலிவையும் குறைய செய்து விடும். இதனை தவிர்க்க புரதம், ஆரோக்கியமான கொழுப்புகள் கொண்ட குறைந்த கிளைசெமிக் குறியீடுகளுடைய முழு தானியங்களை உட்கொள்ளலாம். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/health/do-you-look-older-than-your-age-cut-down-on-these-foods




