தேவையான பொருட்கள்:- பால் - ½ லிட்டர் (தண்ணீர் சேர்க்காதது) சர்க்கரை - 5 டேபிள் ஸ்பூன் இளநீர் - 2 (உள்ளே தேங்காய் இலகுவாக இருக்க வேண்டும்) இளநீரில் உள்ள தண்ணீர் - ½ கப் தேங்காய் - 1 ஏலக்காய் - 5 நெய் - 1 டீஸ்பூன் முந்திரி பருப்பு - 10 செய்முறை:- இளநீர் பாயாசத்திற்கு 4 பிரிவுகளாக தயார் செய்து, அதை ஒன்றாக சேர்க்கப் போகிறோம். முதலில் கியாஸ் அடுப்பை 'ஆன்' செய்து, பாலை ஒரு பாத்திரத்தில் வைத்து மிதமான சூட்டில் 20 நிமிடங்கள் கொதிக்கவைத்து வற்றவிடவும். பால் அடிப்பிடிக்காமல் இருக்க அடிக்கடி கிளறிவிடவும். ½ லிட்டர் பால் பாதியாக குறைந்து ¼ லிட்டராக மாறும். அதன்பின்னர், அத்துடன் சர்க்கரையை சேர்த்து நன்கு கிளறிவிடவும். சர்க்கரை கரைந்ததும், அடுப்பை 'ஆப்' செய்து ஆறவிடவும். இளநீர் தேங்காய் அடுத்து, இலகுவாக உள்ள 2 இளநீர் தேங்காயை எடுத்துக்கொள்ளவும். அதில் உள்ள தண்ணீரை தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும். ஒரு இளநீரில் இருபுறமும் உள்ள தேங்காயை மிக்சி ஜாரில் எடுத்துக்கொண்டு, அத்துடன் ¼ கப், இளநீரில் உள்ள தண்ணீரை ஊற்றி பேஸ்டாக அரைத்துக் கொள்ளவும். இன்னொரு இளநீரில் உள்ள தேங்காயை சிறு சிறு துண்டுகளாக வெட்டிவைத்துக்கொள்ளவும். தேங்காய் பால் அடுத்து, தேங்காயை சிறு சிறு துண்டுகளாக வெட்டி, மிக்சி ஜாரில் போட்டு, ¼ கப் இளநீர் தண்ணீர் விட்டு, அத்துடன் ஏலக்காயையும் போட்டு நன்கு அரைத்து கெட்டியான தேங்காய் பால் எடுத்து வைத்துக்கொள்ளவும். அடுத்து, கியாஸ் அடுப்பை 'ஆன்' செய்து, அதில் வாய் அகன்ற ஒரு பாத்திரத்தை வைத்து, நெய்யை ஊற்றி உருகவிடவும். அதில், முந்திரி பருப்பை உடைத்து போட்டு, பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொண்டு, அடுப்பை 'ஆப்' செய்து கொள்ளவும். வறுத்த முந்திரி இதுவரை 4 பிரிவாக தயார் செய்து வைத்த பொருட்களை சேர்த்தால் இளநீர் பாயாசம் ரெடி. முதலில், வாய் அகன்ற ஒரு பாத்திரத்தில் அரைத்து வைத்த இளநீர் பேஸ்டை சேர்க்கவும். அத்துடன், சிறு சிறு துண்டுகளாக வெட்டிவைத்த இளநீர் துண்டுகளை சேர்க்கவும். தொடர்ந்து, காய்ச்சி ஆறவைத்த பாலை சேர்க்கவும். அடுத்து, கெட்டியான தேங்காய் பாலை சேர்க்கவும். கடைசியாக வறுத்துவைத்த முந்திரி பருப்பை சேர்க்கவும். நன்கு கிளறிவிட்டால் தித்திப்பான இளநீர் பாயாசம் ரெடி. இதை அப்படியே சாப்பிடலாம். அப்பது பிரிட்ஜில் வைத்தும் குளிர்ச்சியாக சாப்பிடலாம். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/sirappukatturaigal/special-news/sunday-special-how-to-make-delicious-tender-elaneer-payasam




