புதுடெல்லி, செஸ் ஒலிம்பிக் போட்டில் இந்தியா பெற்ற வெற்றிகள் பல இளைஞர்களை செஸ் விளையாட ஊக்குவிக்கட்டும் என பிரதமர் மோடி கூறியுள்ளார். செஸ் ஒலிம்பியாட் உஸ்பெகிஸ்தானில், செஸ் ஒலிம்பியாட் 46வது சீசன் நடந்தது. இதன் ஓபன் பிரிவு 11வது சுற்றில் இந்தியா, ஹங்கேரி அணிகள் மோதின. இந்திய அணி (405.5 புள்ளி) 2வது இடம் பிடித்து வெள்ளி வென்றது. ஜெர்மனிக்கு(386.5)வெண்கலம் கிடைத்தது. உஸ்பெகிஸ்தான் அணி (20 புள்ளி) சாம்பியன் ஆனது. அதேபோல் பெண்கள் பிரிவு 11வது சுற்றில் இந்தியா, ஜார்ஜியா அணிகள் மோதின. இப்போட்டி 2.0 2.0 என'டிரா' ஆனது. இந்தி யாவின்ஹம்பி வெற்றிபெற்றார். வந்திகா அகர்வால், சவிதா ஸ்ரீ, தங்களது போட் டியை 'டிரா' செய்தனர். திவ்யா, தோல்வியை தழுவினார். வெண்கலம் 11 சுற்றுகளின் முடிவில், இந்திய பெண்கள் அணி 17 புள்ளிகளுடன் வெண்கலம் வென்றது. செஸ் ஒலிம்பியாட்டில் இந்தியாவுக்கு ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என,2 பதக்கம் கிடைத்தது. இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: வாழ்த்துகள் நமது செஸ் வீரர்களுக்கு வாழ்த்துகள்; அவர்களின் ஆர்வமும் மன உறுதியும் முன்மாதிரியாக திகழ்கின்றன. இந்த வெற்றிகள் இன்னும் பல இளைஞர்களை செஸ் விளையாடவும், அதில் சிறந்து விளங்கவும் ஊக்குவிக்கட்டும்" என குறிப்பிட்டுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/india/two-medals-at-chess-olympiad-may-it-inspire-more-indian-youth-to-play-pm-modi




