கோவை, மாணவர்களின் கல்வி மற்றும் நலனை மையமாகக் கொண்டு செயல்படுத்தப்பட்டு வரும் காலை உணவுத் திட்டத்தை தொடர்ந்து விரிவுபடுத்தி, அதன் பயன்களை மேலும் அதிகமான மாணவர்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் தமிழக முதல்-அமைச்சர் விஜய் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள் பாராட்டுக்குரியவை என கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் தெரிவித்தார். காலை உணவுத் திட்டம் கல்விக் கண் திறந்த பெருந்தலைவர் காமராஜரின் கல்விக் கனவை தலைமுறைகள் கடந்தும் நிலைநிறுத்தும் வகையில், மாணவர்களின் பசியைப் போக்கி, அவர்கள் கல்வியில் முழு கவனத்துடன் ஈடுபடுவதற்கான சூழலை உருவாக்கும் நோக்கில் காலை உணவுத் திட்டம் மேலும் விரிவுபடுத்தப்படுகிறது. தமிழக முதல்-அமைச்சர் விஜய்யின் அறிவுறுத்தலின்படி, கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட நரசிம்மநாயக்கன் பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளி மற்றும் அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்தின் விரிவாக்கத்தை இன்று கனிமொழி சந்தோஷ் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். வலுவான அடித்தளம் இத்திட்டத்தின் மூலம் பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு சத்தான மற்றும் தரமான காலை உணவு வழங்கப்படுவதுடன், காலையில் உணவு உட்கொள்ளாமல் பள்ளிக்கு வரும் மாணவர்களின் பசியைப் போக்கி, அவர்கள் வகுப்பறையில் கவனத்துடன் கல்வி கற்கும் சூழல் உருவாக்கப்படுகிறது. கல்வியுடன் ஊட்டச்சத்தையும் இணைத்து, மாணவர்களின் உடல் மற்றும் மனநலனை கருத்தில் கொண்டு செயல்படுத்தப்படும் இத்திட்டம், அவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கும் எதிர்கால வளர்ச்சிக்கும் வலுவான அடித்தளமாக அமையும். குறிப்பாக, பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு இத்திட்டம் பெரும் பயனளிப்பதுடன், “பள்ளிக்குச் செல்லும் ஒவ்வொரு குழந்தைக்கும் கல்வியுடன் ஊட்டச்சத்து” என்ற சமூகப் பொறுப்பையும் வலுப்படுத்துகிறது. காலை உணவுத் திட்டத்தின் தொடக்க நிகழ்வின்போது, பள்ளிகளில் மாணவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள், குடிநீர், சுகாதாரம், வகுப்பறை உள்ளிட்ட தேவைகள் குறித்தும் கனிமொழி சந்தோஷ் எம்.எல்.ஏ. கேட்டறிந்தார். மாணவர்களின் கல்விச் சூழலை மேம்படுத்த தேவையான அடிப்படை வசதிகளை படிப்படியாக செய்து தருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் உறுதியளித்தார். கல்வி, ஊட்டச்சத்து மற்றும் மாணவர் நலன் ஆகிய மூன்றையும் ஒருங்கிணைக்கும் இத்திட்டம், மேலும் பல அரசு பள்ளிகளுக்கு விரிவுபடுத்தப்படுவது மாணவர்களின் எதிர்காலத்தை வளப்படுத்தும் முக்கியமான முன்னெடுப்பாக அமையும் என்று தெரிவித்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/breakfast-program-enriches-students-future-kanimozhi-santosh-praises




