திருமணம், விழா என்றாலே நினைவுக்கு வருவது மெஹந்தி. ஒரு கையில் அழகான டிசைனை உருவாக்க மெஹந்தி கலைஞரின் பொறுமையும் கைத்திறனும் அவசியம். ஆனால், இனி இதையும் மெஷின் செய்யுமா? என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறது தற்போது வைரலாகும் ஒரு வீடியோ. தொழிலதிபர் Harsh Goenka, X தளத்தில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அதில், ஒரு பெண் தனது கையை ஒரு மெஷினுக்குள் வைக்க, அந்த மெஷின் அவரது கையில் மெஹந்தி டிசைனை வரைவதுபோல காட்சிகள் இடம்பெற்றுள்ளன. வீடியோவைப் பகிர்ந்த Goenka, “Some more jobs gone” என்று குறிப்பிட்டிருந்தார். மனிதர்களின் வேலைக்கு மெஷின் போட்டியா? இந்தப் பதிவு வெளியானதும் automation குறித்த விவாதம் தொடங்கியது. மெஷினால் வேகமாகவும் ஒரே மாதிரியான டிசைன்களையும் உருவாக்க முடியும் என்றாலும், மெஹந்தி கலைஞர்களின் கைத்திறன், creativity, customer-க்கு ஏற்ப டிசைனை மாற்றும் திறன் ஆகியவற்றை ஒரு மெஷின் முழுமையாக மாற்றுமா? என்ற கேள்வியும் எழுந்தது. பலரும் மனிதர்கள் போடும் மெஹந்திக்கு இருக்கும் “human touch” வேறெதிலும் கிடைக்காது என்று கருத்து தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில், தொழில்நுட்ப வளர்ச்சி சில வேலைகளை மாற்றினாலும், அந்தத் தொழில்நுட்பத்தை உருவாக்கவும் இயக்கவும் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகலாம் என்றும் சிலர் குறிப்பிட்டுள்ளனர். Some more jobs gone — Harsh Goenka (@hvgoenka) September 9, 2026 உண்மையிலேயே வேலை செய்யும் மெஷினா? இந்த விவாதத்துக்கு நடுவில் இன்னொரு முக்கியமான கேள்வியும் எழுந்துள்ளது. இந்த வீடியோ உண்மையான மெஹந்தி மெஷினைக் காட்டுகிறதா அல்லது AI-generated video-வா? என்று சில இணையப் பயனர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். மெஷின் மெஹந்தி போடுகிறதா.அல்லது AI உருவாக்கிய காட்சியா? Harsh Goenka பகிர்ந்த வீடியோ குறித்து இந்தக் கேள்வி எழுந்திருக்கிறது. சிலர் AI-generated எனச் சந்தேகித்தாலும், வீடியோ உண்மையானதா என்பதை இதுவரை சுயாதீனமாக உறுதிப்படுத்த முடியவில்லை. ஒரு மெஷின் மெஹந்தி போடுகிறது என்பதைக் கடந்து, இந்தச் சிறிய வீடியோ Automation எவ்வளவு தூரம் செல்கிறது, மனிதர்களின் திறமைகளுக்கு எதிர்காலத்தில் என்ன மதிப்பு இருக்கும்? என்ற பெரிய கேள்வியையும் அனைவரிடத்திலும் எழுப்பியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.vikatan.com/trending/harsh-goenka-shares-video-of-machine-applying-mehendi




