ஜெனீவா, உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி நவம்பர் 25-ந்தேதி முதல் டிசம்பர் 15-ந்தேதி வரை சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெறுகிறது. குகேஷ் 'பிடே' உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் நடப்பு சாம்பியனான இந்தியாவின் குகேசுடன், கேண்டிடேட்ஸ் போட்டியில் வெற்றி பெற்றவரான 20 வய தான ஜவோகிர் சிந்தாரோவ் (உஸ்பெகிஸ்தான்) மோதுகிறார். தற்போது இந்த போட்டி நடைபெறும் இடம் அறிவிக்கப்பட்டுள்ளது. 14 சுற்றுகள் இதன்படி இவ்விரு வீரர்கள் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி நவம்பர் 25-ந்தேதி முதல் டிசம்பர் 15-ந்தேதி வரை சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடை பெறுகிறது. கிளாசிக்கல் முறையில் நடைபெறும் இந்த போட்டி 14 சுற்றுகளை கொண்டது. யார் முதலில் 7.5 புள்ளியை எட்டுகிறார்களோ அவர்கள் மகுடம் சூடுவார்கள். 7-7 என சமநிலை நீடித்தால் டைபிரேக்கர் கடைபிடிக்கப்படும். 2024-ம் ஆண்டில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை இளம் வயதில் உச்சி முகர்ந்த வீரர் என்ற வரலாறு படைத்த தமிழகத்தின் 20 வயதான குகேஷ் அதை மீண்டும் தக்கவைப்பாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. பிடே முடிவு சர்வதேச செஸ் சம்மேளனத்தின் (பிடே) இடைக்கால தலைவர் விஸ்வநாதன் ஆனந்த் கூறுகையில், 'இந்தியா, அமெரிக்கா, சைப்ரஸ் உள்ளிட்ட சில நாடுகள் உலக சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியை நடத்த ஆர்வம் காட்டின. அனைத்து விதமான முன்மொழிவுகளையும் கவனமாக பரிசீலித்த பிறகு போட்டியை பொதுவான இடத்தில் நடத்த பிடே முடிவு செய்துள்ளது. உலகத்தரம் வாய்ந்த செஸ் போட்டி நாடுகளையும், கலாசாரங்களையும் ஒன்றிணைக்கும் பாரம்பரியம் கொண்ட ஜெனீவா நகரில் இந்த போட்டி நடைபெறும். சுவிட்சர்லாந்துக்கு உலகளாவிய செஸ் சமூகத்தை வரவேற்பதை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளோம். உள்ளூர் ரசிகர்கள் உலகத்தரம் வாய்ந்த செஸ் போட்டியை நேரில் பார்க்கும் அனுபவத்தை பெறுவார்கள். அதே நேரத்தில் உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்கள் செஸ் உலகின் மிகப்பெரிய பட்டத்திற்கான இந்த மோதலை ஆன்லைனில் பின்தொடரலாம்' என்றார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/sports/othersports/gukesh-to-face-sindarov-in-2026-world-chess-match




