புவனேஸ்வர், ஒடிசா மாநிலம் தேன்கனல் மாவட்டத்தில் உள்ள ஹிண்டோல் பகுதியில், மாலதி தேஹுரி என்ற பெண், வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வந்தார். கடந்த 2011-ம் ஆண்டு நிலப் பட்டா மாற்றம் தொடர்பான நடைமுறையை மேற்கொள்வதற்காக லஞ்சம் வாங்கும்போது லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளிடம் மாலதி பிடிபட்டார். இதையடுத்து மாலதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கு தொடர்பான சட்ட நடவடிக்கைகளை ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்டு வந்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை முடிவடைந்த நிலையில், மாலதிக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், 3,000 ரூபாய் அபராதமும் விதித்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/india/odisha-female-revenue-inspector-sentenced-to-2-years-in-prison-in-bribery-case




