தூத்துக்குடி, சமூக வலைதளங்களில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ஆயுதங்களுடன் 'ரீல்ஸ்' வீடியோ பதிவிட்ட தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினம் பகுதியைச் சேர்ந்த சிறுவன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். சமூக வலைதளங்களில் கத்தியுடன் ரீல்ஸ் தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினம், வண்டிமலைச்சியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த வேல்முருகன் மகன் மதன் (வயது 18). இவரும், இவரது நண்பரான 16 வயது சிறுவன் ஒருவரும் சேர்ந்து பொதுமக்களுக்கு பயத்தையும், அச்சுறுத்தலையும் ஏற்படுத்தும் வகையில் கத்தி உள்ளிட்ட கூர்மையான ஆயுதங்களைக் கையில் ஏந்தியபடி இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் 'ரீல்ஸ்' வீடியோக்களை பதிவிட்டு வந்துள்ளனர். சிறுவன் உள்பட 2 பேர் கைது இதுகுறித்து தகவல் அறிந்த காயல்பட்டினம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இருதயராஜ் உடனடியாக இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்தார். அதைத் தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரென்னிஸ் தலைமையிலான போலீசார் மதன் மற்றும் 16 வயது சிறுவன் ஆகிய 2 பேரையும் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/reels-with-weapons-on-social-media-2-people-including-a-boy-arrested




