கொழும்பு, இலங்கைக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 2 போட் டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் காலேவில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்திய அணி 165 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இந்தியா-இலங்கை அணிகள் இடையி \லான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொழும்புவில் உள்ள எஸ்.எஸ்.சி. ஸ்டேடியத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் 5-வது இடத்தில் இருக்கும் இந்திய அணி இறுதிப்போட்டி வாய்ப்பை வலுப்படுத்த இன்றைய ஆட்டத்திலும் வெற்றி பெற்றாக வேண்டும். மேலும் 2023-ம் ஆண்டு ஜூலை மாதத்துக்கு பிறகு வெளிநாட்டு மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்லாத குறையை போக்க தீவிரம் காட்டும். உலக முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுத்து தொடரை சமன் செய்ய இலங்கை அணி வரிந்து கட்டும். சமபலம் வாய்ந்த அணிகள் மோதும் இந்த ஆட்டத்தில் விறுவிறுப் புக்கு குறைவு இருக்காது. 2015-ம் ஆண்டுக்கு பிறகு இலங்கை அணி, இந்தியாவுக்கு எதிராக டெஸ்டில் வெற்றி பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மைதானத்தில் இந்திய அணி 9 டெஸ்டில் விளையாடி 3-ல் வெற்றியும், 2-ல் தோல்வியும், 4-ல் டிரா கண்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/sports/cricket/india-vs-sri-lanka-2nd-test-starts-today




