மும்பை, 3,500 அடி ஆழ பள்ளத்தாக்கில் ஜிப்லைனில் சிக்கிய சுற்றுலாப் பயணி பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். விளையாட்டு தளம் மராட்டிய மாநிலம் நந்தூர்பார் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலா தலமான தோரன்மால் மலைப்பிரதேசத்தில் இந்த நெஞ்சை உலுக்கும் சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள 'சீதாகாய் பாயின்ட்' பகுதியில், சாகச விரும்பிகளுக்காக புதிதாக ஜிப்லைன் விளையாட்டு தளம் ஒன்று திறக்கப்பட்டது. 3,500 அடி பள்ளதாக்கு இந்நிலையில், சுற்றுலா பயணி ஒருவர் இந்த ஜிப்லைனில் உற்சாகமாக பயணம் செய்துகொண்டிருந்தார். அவர் 3,500 அடி ஆழமுள்ள பயங்கர பள்ளத்தாக்கின் நடுவே சென்றபோது, எதிர்பாராத விதமாக ஜிப்லைனில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் அந்த பயணி மேற்கொண்டு நகர முடியாமல், பாதாளத்தின் மேல் அந்தரத்திலேயே சிக்கி கொண்டார். கீழே பார்த்தால் மரண குழி போன்ற ஆழம், மேலே மெல்லிய கயிறு என அவர் உயிருக்கு போராடியதை கண்டு அங்கிருந்த மற்ற சுற்றுலா பயணிகள் அலறினர். தோரன்மால் மலைப்பகுதியே பெரும் பரபரப்பில் மூழ்கியது. பத்திரமாக மீட்பு விபத்து குறித்து தகவல் அறிந்ததும், ஜிப்லைன் மையத்தின் பயிற்சி பெற்ற மீட்பு பணியாளர்கள் உடனடியாக களமிறங்கினர். ஒரு பணியாளர் தனது உயிரையும் பொருட்படுத்தாமல் அதே கயிற்றின் வழியே சறுக்கிக் கொண்டு, அந்தரத்தில் தவித்த பயணியை நோக்கி மின்னல் வேகத்தில் சென்றார். அங்கு நிலவிய கடும் காற்றையும் பொருட்படுத்தாமல், சாதுரியமாக செயல்பட்ட அவர், பயணியை அணைத்தபடி பத்திரமாக மீட்டு தரைக்கு கொண்டு வந்தார். சாகச தலம் நூலிழையில் உயிர் தப்பிய அந்த பயணிக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை. இந்த திக் திக் நிமிடங்களின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி, பார்ப்போரை நெஞ்சு பதற வைக்கும் வகையில் வைரலாகி வருகிறது. சாகச தலங்களில் பாதுகாப்பு முறைகளை இன்னும் பலப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/india/3500-feet-deep-valley-tourist-trapped-on-zipline-rescued-safely




