Doctor Vikatan: டெங்கு பாதித்த நண்பர்கள் சிலர், மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டு, சிகிச்சை பெற்று வீட்டுக்குத் திரும்பினார்கள். டெங்கு பாதித்தாலே மருத்துவமனையில் அட்மிட் செய்துதான் சிகிச்சை எடுக்க வேண்டுமா. காய்ச்சலுக்கான மருந்துகள் எடுத்துக்கொண்டு வீட்டிலேயே சிகிச்சை பெற முடியாதா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, குடும்பநல மருத்துவரும் இன்டர்னல் மெடிசின் நிபுணருமான சாதனா தவப்பழனி குடும்பநல மருத்துவரும் இன்டர்னல் மெடிசின் நிபுணருமான சாதனா தவப்பழனி நோயாளிக்கு உடம்பு சரியில்லாமல் போகும்போது, அவரிடம் காணப்படும் அறிகுறிகளையோ அல்லது அறிகுறிகளின் தன்மைகளையோ சாதாரண மனிதரால் கணிக்க முடியாது. டெங்கு காய்ச்சலுக்கு ஆன்டிபயாடிக் (Antibiotics) சிகிச்சைகள் எதுவும் இல்லை. இது முக்கியமாக அறிகுறிகளுக்கான சிகிச்சைதான் (Symptomatic Treatment). எனவே, நோயாளியின் காய்ச்சலின் தீவிரத்தைக் குறைக்க வேண்டும் என்பதற்காக நோயாளிகளுக்கு பாராசிட்டமால் (Paracetamol) வழங்கப்படும். அதன் பிறகு, அவர்களின் ரத்தத் தட்டணுக்களின் எண்ணிக்கை (Platelet count) எப்படி மாறுகிறது என்பதை நாம் கண்காணிக்க வேண்டும். ஒருவேளை, நோயாளிக்கு செப்டிக் ஷாக் (Septic shock) அல்லது டெங்கு ரத்தக்கசிவு காய்ச்சல் (Hemorrhagic fever) போன்ற தீவிரப் பிரச்னைகள் ஏற்பட்டாலோ, அல்லது ரத்தத் தட்டணுக்கள் மிகவும் குறைந்தாலோ, நோயாளிக்கு ரத்தத் தட்டணுக்கள் செலுத்த (Platelet transfusion) வேண்டிய தேவை ஏற்படலாம். எனவே, இந்த வகையான தீவிர சிகிச்சைகளை மருத்துவமனையில் மட்டுமே செய்ய முடியும். இதை வெளி நோயாளிப் பிரிவில் (Outpatient) செய்ய முடியாது. நோயாளி மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட வேண்டும். தொற்றுநோய் சிறப்பு மருத்துவர் ரத்தத் தட்டணுக்களைக் கண்காணித்து, நோயாளியின் உடல்நிலையில் ஏற்படும் முன்னேற்றத்தைக் கண்காணிப்பார். ரத்தத் தட்டணுக்களின் (Platelets) எண்ணிக்கை குறையும் போது, சம்பந்தப்பட்ட நபரின் கைகள், நெஞ்சு அல்லது வயிற்றுப் பகுதியில் தடிப்புகள், சிவப்புப் புள்ளிகள் (Rashes) தோன்றுவதைப் பார்க்கலாம். நோயாளியின் உடல்நிலை மிகவும் மோசமடையலாம். அவர்களால் எதுவுமே சாப்பிட முடியாது. பாராசிட்டமால் மற்றும் பிற அறிகுறிகளுக்கான மாத்திரைகளை எடுத்த பிறகும் கூட, அவரால் முடியாமல் போகலாம். மற்றவர்கள் கேட்கும் சாதாரண கேள்விகளுக்குக்கூடடி நோயாளி சரியாகப் பதிலளிக்காமல் இருக்கலாம். ரத்தத் தட்டணுக்கள் மிகவும் குறைந்தாலோ, நோயாளிக்கு ரத்தத் தட்டணுக்கள் செலுத்த (Platelet transfusion) வேண்டிய தேவை ஏற்படலாம்.Doctor Vikatan: சாதாரண காய்ச்சலா, டெங்குவா. அறிகுறிகளை வைத்துக் கண்டுபிடிக்க முடியுமா? பாதிக்கப்பட்டது குழந்தை என்றால், அது மிகவும் அமைதியாகிவிடும். அது கவலைப்பட வேண்டிய விஷயம். குழந்தை மிகவும் சோர்வாகக் காணப்பட்டாலோ, விளையாடாமல் இருந்தாலோ, சரியாகச் சாப்பிடாமலும் அதிக அளவு தண்ணீர் குடிக்காமல் இருந்தாலோ மற்றும் நோயாளிக்கு செப்டிக் ஷாக் (Septic shock) போன்ற அதிர்ச்சி நிலை இருப்பதைக் கண்டறிந்தாலோ, உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். ரத்தத் தட்டணுக்களின் எண்ணிக்கை இயல்பாக இருக்கலாம். ஆனால், நோயாளி தீவிர நீரிழப்பால் (Dehydrated) பாதிக்கப்பட்டிருக்கலாம். அத்தகைய நோயாளியை மருத்துவமனையில் அனுமதித்து நரம்பு வழியாக திரவங்கள் (IV fluids) செலுத்த வேண்டியிருக்கலாம். எனவே, டெங்கு காய்ச்சலைப் பொறுத்தவரை ரத்தத் தட்டணுக்களின் எண்ணிக்கை குறைவது மட்டுமே ஒரு நோயாளியை மருத்துவமனையில் அனுமதிப்பதற்கான ஒரே காரணம் அல்ல. மருத்துவமனையில் அனுமதி தேவையா, வேண்டாதா என்ற முடிவை மருத்துவர்கள் மட்டுமே எடுக்க வேண்டும், நோயாளிகள் எடுக்கக் கூடாது. டாக்டர் சாதனா தவப்பழனிசென்னை, அப்போலோ மருத்துவமனையில் குடும்பநல மருத்துவர் மற்றும் இன்டர்னல் மெடிசின் நிபுணராகப் பணிபுரிபவர். கோவிட் சிகிச்சையில் நிபுணத்துவம் பெற்றவர். 20 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் என்ற பெயரில் வெளியாகும். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.vikatan.com/health/is-it-mandatory-to-be-admitted-to-hospital-if-affected-by-dengue-fever




