புதுடெல்லி, வங்கி ஊழியர் சங்க கூட்டமைப்பு (யு.எப்.பி.யு) சார்பில் வரு கிற 28 முதல் 30-ந்தேதி வரை 3 நாட்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. வாரத்தில் 5 நாள் வேலையை அமல்படுத்த வேண்டும், செயல்திறன் சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற உள்ளது. வங்கி ஊழியர் சங்கங்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து, ஊக்கத்தொகை திட்டம் ஏற்கனவே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. வாரத்தில் 5 நாள் வேலை கோரிக்கை தொடர்ந்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது. ஊழியர் சங்கங்களின் பெரும்பாலான தீர்வு காணப்பட்டுள்ளதாலும், வங்கி ஊழியர்களின் நலன் சார்ந்த நடவடிக்கைகளை அரசு தொடர்ந்து எடுத்து வருவதாலும், வங்கிச் சேவைகளுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தைக் கைவிட வேண்டும் என நிதி அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/india/central-government-urges-bank-employees-to-call-off-the-strike




