சென்னை, தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. கடந்த 3-ந் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,320-ம், கிராமுக்கு ரூ.290-ம் அதிகரித்து, ஒரு சவரன் ரூ.1,13,920-க்கும், ஒரு கிராம் ரூ. 14,240-க்கும் விற்பனையானது. அதேபோல, 4-ந்தேதியும் தங்கம் விலை உயர்ந்த நிலையில், 5-ந்தேதி அதிரடியாக குறைந்தது. அதன்படி சவரனுக்கு ரூ.1,360 குறைந்து ஒரு சவரன் ரூ.1,13,530-க்கும், கிராமுக்கு ரூ.170 குறைந்து ஒரு கிராம் ரூ.14,190-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இவ்வாறு ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வந்த தங்கம் விலை, நேற்று சவரனுக்கு ரூ.880 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.1,14,040க்கும், கிராமுக்கு ரூ.110 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,255க்கும் விற்பனை செய்யப்பட்டது. இன்றைய தங்கம் விலை இந்த நிலையில், தங்கம் விலை இன்று ஒரேயடியாக சரிவை சந்தித்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,920 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,12,112க்கும், கிராமுக்கு ரூ.240 குறைந்து ஒரு கிராம் ரூ.14,015க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது, அதன்படி, வெள்ளி கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.245-க்கும், கிலோவுக்கு 10,000 குறைந்து, ஒரு கிலோ ரூ.2,45,000 விற்பனை செய்யப்பட்டு வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/business/gold-rate-chennai/gold-prices-have-dropped-sharply-what-is-the-situation-today-2




