சென்னை, தெற்கு குஜராத்தில் இருந்து மத்திய கேரளா வரை ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. இதன்காரணமாக தமிழகத்தில் இன்று முதல் 13-ம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில், தமிழகத்தில் இன்று இரவு 7 மணி வரை 20 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி செங்கல்பட்டு, சென்னை, கோவை, திண்டுக்கல், கரூர், பெரம்பூர், புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, காஞ்சீபுரம், தேனி, நீலகிரி, திருவள்ளூர், திருச்சி, திருப்பத்தூர், திருப்பூர், மதுரை மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் பலத்த இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும், கன்னியாகுமரி, தென்காரி மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/chance-of-rain-in-20-districts-of-tamil-nadu-until-7-pm




