மத்திய கிழக்கு நாடுகளின் மீது ஈரான் நடத்தி வரும் கடல்வழித் தாக்குதல்களை முறியடிக்கவும், வர்த்தகப் பாதைகளைப் பாதுகாக்கவும் 'இந்தியா - மத்திய கிழக்கு - ஐரோப்பா பொருளாதாரப் பாதை' (IMEC) திட்டத்திற்கு அமெரிக்கா முழு ஆதரவு அளிக்கும் என அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தின் இடையே நடைபெற்ற வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (GCC) தலைவர்களுடனான சந்திப்பில் பேசிய ட்ரம்ப், ``அண்டை நாடுகளின் வர்த்தகக் கப்பல்கள் மீது ஈரான் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தி வருகிறது. சரக்கு கப்பல் இதன் காரணமாகவே மத்திய கிழக்கின் எரிசக்தி மற்றும் வர்த்தக வழிகளை ஈரானின் கட்டுப்பாட்டில் உள்ள கடல் பகுதியிலிருந்து வேறு பகுதிக்கு மாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. குழாய்கள் அல்லது பிற வழிகள் மூலம் கச்சா எண்ணெயை பாதுகாப்பாக வெளியேற்ற 'IMEC' திட்டம் பெரும் உதவியாக இருக்கும். கடந்த பத்தாண்டுகளாக நிலவி வரும் சவால்களை முறியடிக்கும் தருவாயில் நாம் இருக்கிறோம். ஈரான் நாட்டைப் பொருளாதார ரீதியாக அமெரிக்கா முற்றிலும் தனிமைப்படுத்தியுள்ளது. காலம் கடந்துவிட்டால் ஈரான் ஒரு தேசமாகத் தப்பிப்பிழைக்க முடியாது. அமெரிக்கா நடத்திய 'ஆப்பரேஷன் மிட்நைட் ஹேமர்' தாக்குதல் மூலம் ஈரானின் அணுசக்தித் திட்டம் முற்றிலும் அழிக்கப்பட்டு இடிபாடுகளுக்குள் புதைக்கப்பட்டுவிட்டது." எனக் குறிப்பிட்டிருக்கிறார். அதிபர் ட்ரம்ப் குறிப்பிடும் இந்த திட்டம், இந்தியாவில் கடந்த 2023-ம் ஆண்டு நடைபெற்ற ஜி20 உச்சிமாநாட்டின் போது இந்தியா, அமெரிக்கா, சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றால் தொடங்கப்பட்டது. ட்ரம்ப் இத்திட்டம் இந்தியாவை வளைகுடா நாடுகளுடன் இணைக்கும் 'கிழக்குப் பாதை' மற்றும் வளைகுடா நாடுகளை ஐரோப்பாவுடன் இணைக்கும் 'வடக்குப் பாதை' என இரு வழித்தடங்களைக் கொண்டது. இதில் சரக்கு ரயில் வலையமைப்புகள், டிஜிட்டல் கேபிள்கள் மற்றும் பசுமை ஹைட்ரஜன் கொண்டு செல்வதற்கான குழாய்கள் அமைக்கப்படவுள்ளன. சீனாவின் 'பெல்ட் அண்ட் ரோட்' திட்டத்திற்கும், ஈரான் ஆதிக்கம் செலுத்தும் 'ஹார்முஸ் ஜலசந்தி' கடல்வழிப் பாதைக்கும் வலுவான மாற்றாக இத்திட்டம் பார்க்கப்படுகிறது. இத்திட்டம் முழுமையடைந்தால் இந்தியா மற்றும் ஐரோப்பாவிற்கு இடையிலான வர்த்தகப் போக்குவரத்து நேரம் பாதியாகக் குறையும். தற்போது ஹார்முஸ் ஜலசந்தியில் தொடரும் பதற்றத்தால் இத்திட்டத்திற்கான தேவை அதிகரித்துள்ள போதிலும், காசா போரின் தீவிரத்தன்மை, பிராந்திய பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் மற்றும் சர்வதேச ஒருங்கிணைப்பில் உள்ள சிக்கல்கள் காரணமாக திட்டப் பணிகள் இன்னும் முழு வீச்சை எட்டவில்லை. உள்கட்டமைப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டாலும், திட்டம் நிறைவடையும் குறிப்பிட்ட இலக்கு தேதிகள் இதுவரை அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை. இன்னும் 7 நாள்களில் ஹார்முஸ் நீர்ச்சந்தி திறக்குமா? அமெரிக்காவில் ஈரான் குழு! விரைவில் குட் நியூஸ்? முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.vikatan.com/government-and-politics/trump-has-announced-that-the-us-will-extend-full-support-to-the-imec-project




