சென்னை, ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை உடனடியாக வெளியிட வேண்டும் என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் கடந்த ஜூலை 4 மற்றும் 5-ஆம் தேதிகளில் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான முடிவுகளை வெளியிட விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை சென்னை ஐகோர்ட்டு விலக்கிக் கொண்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதன் மூலம் அந்தத் தேர்வை எழுதிய, பணியிலுள்ள ஆசிரியர்கள் 2 லட்சத்து 20,464 பேரின் மன உளைச்சல் முடிவுக்கு கொண்டு வரப்படும். தேர்ச்சி மதிப்பெண்கள் ஐகோர்ட்டு தடையின் காரணமாகவே முடிவுகளை வெளியிட முடியவில்லை என்று கூறி வந்த தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம், இப்போது தடை நீக்கப்பட்டு விட்ட நிலையில் உடனடியாக தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும். உச்சநீதிமன்றத் தீர்ப்பின் காரணமாக 3.28 லட்சம் ஆசிரியர்களின் பணிக்கு பெரும் ஆபத்து ஏற்பட்டிருப்பதால், அவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தேர்ச்சி மதிப்பெண்களை 150-க்கு 52 (35%) ஆக தமிழக அரசு குறைக்க வேண்டும். புதிய ஆசிரியர் தகுதித் தேர்வு உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில், 2010-ஆம் ஆண்டுக்கு முன் பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் அனைவரும் 2028-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் தகுதித் தேர்வை எழுதி முடிக்க வேண்டும். ஆனால், இன்னும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இந்தத் தகுதித் தேர்வை எழுதவில்லை. அவர்களும், விரைவில் முடிவு அறிவிக்கப்படவுள்ள தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களும் எழுதும் வகையில் புதிய ஆசிரியர் தகுதித் தேர்வை உடனடியாக அறிவிக்க ஆசிரியர் தேர்வு வாரியம் முன்வர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/teacher-eligibility-test-results-should-be-announced-immediately-anbumani-ramadoss-insists



