வாவ்ரே, உலகக் கோப்பை பெண்கள் ஆக்கி தொடரின் இறுதிப்போட்டியில் வெற்றிபெற்று 16 ஆண்டுகளுக்குப் பிறகு அர்ஜென்டினா மகுடம் சூடியது. ஆக்கி உலகக் கோப்பை ஆக்கி போட்டி பெல்ஜியத்தின் வாவ்ரே மற்றும் நெதர்லாந்தின் ஆம்ஸ்டெல்வீன் நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்றுள்ளன. நெதர்லாந்து-அர்ஜென்டினா பெண்கள் பிரிவில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில், 9 முறை சாம்பியனும், உலக தரவரிசையில் நம்பர் ஒன் அணியுமான நெதர்லாந்து, முன்னாள் சாம்பியனான அர்ஜென்டினாவை எதிர்கொண்டது. பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முடிவில் இரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தன. நெதர்லாந்து அணிக்காக யிபி ஜான்சென் 30-வது நிமிடத்தில் பெனால்டி கார்னர் வாய்ப்பை கோலாக்கினார். இதற்கு பதிலடி கொடுத்த அர்ஜென்டினாவின் மரியா ஜோஸ் கிரனட்டோ 54-வது நிமிடத்தில் பெனால்டி கார்னர் மூலம் கோல் அடித்தார். பெனால்டி ஷூட்-அவுட் ஆட்டம் சமனில் முடிந்ததை தொடர்ந்து, சாம்பியனை தீர்மானிக்க பெனால்டி ஷூட்-அவுட் நடத்தப்பட்டது. இதில் அபாரமாக செயல்பட்ட அர்ஜென்டினா அணி, 3-1 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இதன் மூலம் அர்ஜென்டினா அணி 3-வது முறையாக உலகக் கோப்பை ஆக்கி சாம்பியன் பட்டத்தை வென்றது. அந்த அணி இதற்கு முன்பு 2002 மற்றும் 2010-ம் ஆண்டுகளில் உலகக் கோப்பையை கைப்பற்றியிருந்தது. ஆண்கள் இறுதிப்போட்டி இதனிடையே, ஆண்கள் பிரிவு உலகக் கோப்பை ஆக்கி தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெறுகிறது. இன்றிரவு 8 மணிக்கு நடைபெறும் இறுதிப்போட்டியில் ஸ்பெயின்-ஜெர்மனி அணிகள் சாம்பியன் பட்டத்திற்காக பலப்பரீட்சை நடத்துகின்றன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/sports/hockey/argentina-beat-netherlands-in-shootout-to-clinch-womens-hockey-world-cup-title




