தென்காசி, குற்றால அருவிகளில் கடந்த சில வாரங்களாக நீர்வரத்து மிகக்குறைந்த அளவிலேயே இருந்தது. இதற்கிடையே, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் கடந்த இரு நாட்களாக மழை பெய்து வருகிறது. குற்றாலம் இதனால் நேற்று முன்தினம் அருவிகளில் நீர் வரத்து அதிகரித்ததை தொடர்ந்து, சுற்றுலா பயணிகள் குளிக்க தடைவிதிக்கப்பட்டது. இதனையடுத்து அன்று மாலையில் நீர்வரத்து சீரானதை தொடர்ந்து குளிக்க அனுமதி வழங்கப்பட்டது. குளிக்க தடை இதனையடுத்து, குற்றாலம் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நேற்று மழை பெய்தது. இதனால் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்ததையடுத்து சுற்றுலா பயணிகள் குளிக்க மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏமாற்றம் இந்த நிலையில், தொடர்மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் குளிக்க 2வது நாளாக இன்றும் தடை விதிக்கப்பட்டுள்ளது. விடுமுறை தினமான என்பதால் ஆவலுடன் நீராட வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/flash-floods-at-courtallam-falls-bathing-banned




