திருவனந்தபுரம், செங்கல்பட்டைச் சேர்ந்த வக்கீல் சத்யஸ்ரீ சர்மிளா. திருநங்கையான இவர் ஆவணி மாத பூஜையை முன்னிட்டு கடந்த 20-ந்தேதி 41 நாட்கள் விரதம் இருந்து சபரிமலை தரிசனத்திற்கு சென்றார். ஆனால் பம்பையில் போலீசார் அவரை தடுத்து நிறுத்தி தரிசனத்திற்கு அனுமதிக்க மறுத்து திருப்பி அனுப்பிவிட்டனர். இது அவருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து அவர் கேரளம் ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். அதில், கடந்த ஜனவரி 3-ந்தேதி மற்றும் ஏப்ரல் 15-ந்தேதி ஆகிய நாட்களில் இருமுடி கட்டி வந்து சபரிமலையில் தரிசனம் செய்துள்ளேன். தற்போது திருநங்கை என கூறி போலீஸ் அதிகாரிகள் சபரிமலைக்கு செல்ல அனுமதி மறுத்துள்ளனர். எனவே சபரிமலை தரிசனத்துக்கு திருநங்கை செல்ல உத்தரவிட வேண்டும் என தெரிவித்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, இதுதொடர்பாக விளக்கம் அளிக்க அரசுக்கும், சம்பந்தப்பட்ட துறைக்கும் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். மேலும் வழக்கு விசாரணையை வருகிற 3-ந்தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/india/why-denied-permission-transwoman-sabarimala-high-court-seeks-explanation




