புதுடெல்லி, ராமர் கோவில் நன்கொடை முறைகேடு தொடர்பான பிரச்சினையில் பிரதமர் மோடி மவுனமாக இருப்பது ஏன்? என காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது. இது குறித்து அக்கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;- “அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் பா.ஜ.க.-ஆர்.எஸ்.எஸ். அமைப்பால் திட்டமிட்டு நடத்தப்பட்ட நன்கொடை திருட்டு மற்றும் மக்களின் நம்பிக்கைக்கு இழைக்கப்பட்ட துரோகம் குறித்து பிரதமர் மோடியின் மவுனமாக இருப்பது ஏன்? அவர் ஏன் இந்தத் திருடர்களுக்கு உதவ இவ்வளவு ஆர்வமாக இருக்கிறார்? ஊழலுக்கு 'சகிப்புத்தன்மை இல்லை' என்று கூறும் பிரதமர், கடந்த ஒரு மாதமாக இந்த முக்கியமான விஷயத்தில் ஏன் மவுனம் காத்து வருகிறார் என்று தேசம் கேட்கிறது. இந்த நம்பிக்கை துரோகத்திற்காக மக்கள் அவரிடம் பதில்களைக் கோருகின்றனர். பிரதமர் தனது மவுனத்தை கலைத்து மக்களுக்கு பதிலளிக்க வேண்டும்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/india/ram-temple-donation-irregularities-why-is-the-prime-minister-silent-on-an-issue-concerning-peoples-faith-congress-asks




