சென்னை, ஒரு மாதத்துக்கும் மேலாக தொடரும் மின்வெட்டுக்கு தமிழக அரசு அலட்சியம் காட்டுவதா என பாமக தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் இன்று காலை நடைபெற்ற செங்கோட்டையன், அருண்ராஜ் உள்ளிட்ட 5 அமைச்சர்கள் பங்கேற்ற தேர்தல் பரப்புரைக் கலந்தாய்வுக் கூட்டத்தின் போது மின் தடை ஏற்பட்டிருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் அறிவிக்கப்படாத மின்வெட்டும், அடிக்கடி ஏற்படும் மின் தடைகளும் அதிகரித்து வருவது கண்டிக்கத்தக்கது. அறிவிக்கப்படாத மின்வெட்டு தலைநகரம் சென்னை தொடங்கி தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் அறிவிக்கப்படாத மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் அனைத்துத் தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். அறிவிக்கப்படாத மின்வெட்டு, மின் அழுத்தம் சீராக இல்லாதது உள்ளிட்ட காரணங்களால் மட்டும் கோவை பகுதியில் 30 கோடி ரூபாய் மதிப்புள்ள எந்திரங்கள் சேதமடைந்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழ்நாடு முழுவதும் 100 கோடி ரூபாய்க்கும் கூடுதலான கருவிகள் சேதமடைந்துள்ளன. குற்றச்சாட்டுகள் வழக்கத்தை விட மின்சாரத்தின் தேவை அதிகமாக இருப்பது தான் மின் வெட்டுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. இதை சமாளிக்க 2000 மெகாவாட் மின்சாரம் வெளிச்சந்தையிலிருந்து வாங்கப்படுவதாகவும், அதனால் மின்வெட்டு சீராகி விட்டதாகவும் தமிழக அரசுத் தரப்பில் கூறப்பட்டு வருகிறது. ஆனால், கள நிலைமையில் எந்த மாற்றமும் இல்லை. கிராமப்புறங்களில் ஒரு நாளைக்கு 6 முதல் 8 மணி நேரம் வரை மின்சாரம் நிறுத்தப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. காவிரி பாசன மாவட்டங்களில் சம்பா சாகுபடியும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது. மின்வெட்டை சரி செய்வது சாத்தியமில்லாத செயல் அல்ல. தமிழ்நாட்டின் மின்சாரத் தேவையை விட உற்பத்தியும், கொள்முதலும் சேர்ந்து 2000 மெகாவாட் குறைவாக இருப்பது தான் மின் வெட்டுக்கு காரணம் ஆகும். தேசிய சந்தையில் மின்சாரம் இப்போது எளிதாகக் கிடைக்கிறது. தமிழ்நாட்டில் தனியார் மின்னுற்பத்தி நிலையங்களிலிருந்து கூட மின்சாரம் வாங்க முடியும். ஆனால், அதற்கான நடவடிக்கைகள் அரசுத் தரப்பில் முழுமையாக மேற்கொள்ளப்படாதது மின்வெட்டு மற்றும் மின் தடைக்கு காரணம் ஆகும். நடவடிக்கை தமிழ்நாடு மின்சார வாரியத்தில் முதல்-அமைச்சர் விஜய் நேரடியாக செய்த பிறகும் மின்வெட்டு தொடர்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழ்நாடு அரசும், மின்சார வாரியமும் இனியும் அலட்சியம் காட்டாமல், போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு மின்வெட்டைப் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/power-cuts-that-have-been-going-on-for-over-a-month-is-the-tamil-nadu-government-showing-negligence-anbumani-asks




