சென்னை, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- இன்று (14.08.2026) கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, அரியலூர், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். ராமநாதபுரம், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், கரூர், நாமக்கல், சேலம், ஈரோடு, திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில், ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழ்நாட்டின் ஏனைய பகுதிகளில், ஓரிரு இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை (15.08.2026) மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடியகலந்த மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வட கடலோரத் தமிழகத்தின் ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. 17-08-2026: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், கடலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், புதுவையிலும் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். 18-08-2026: மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோரத் தமிழக மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தின் பிற பகுதிகளில் சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். 19-08-2026: காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களின் பிற பகுதிகள், வட கடலோரத் தமிழக மாவட்டங்களின் பிற பகுதிகள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தின் பிற பகுதிகளில் சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/weather/chance-of-heavy-rain-in-10-districts-of-tamil-nadu-today-2




