சென்னை, தமிழ்நாட்டிலுள்ள அனைத்து நியாய விலை கடைகளிலும் இன்று ரேஷன் கார்டு தாரர்களுக்கான கை விரல் ரேகைப்பதிவு சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. மத்திய அரசு மத்திய அரசின் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், 2013-ன் படி, முன்னுரிமை மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டைகளில் உள்ள ஆதார் விவரங்களை சரிபார்க்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மின்னணு குடும்ப அட்டையில் பெயர் இணைக்கப்பட்டுள்ள அனைத்து பயனாளிகளும் தங்களது கை விரல் ரேகை அடிப்படையிலான இந்த சரிபார்ப்பை கட்டாயம் செய்துகொள்ள வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. 96.21 சதவீதம் அதன்படி குடும்ப உறுப்பினர்களுக்கு ஏதும் இடையூறுமின்றி இப்பணியினை செய்திட அறிவுறுத்தப்பட்டு கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் முதல் குடும்ப உறுப்பினர்களின் கைவிரல் ரேகை சரிபார்ப்பு பணி நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி முன்னுரிமை ரேஷன் அட்டைகளில் 96.21 சதவீதம் கைவிரல் ரேகை சரிபார்ப்பு பணியானது மேற்கொள்ளப்பட்டுள்ளது. சிறப்பு முகாம் ரேஷன் கார்டுதாரர்களின் கை ரேகைப் பதிவை 100 சதவீதம் நிறைவு செய்யும் பொருட்டு, இன்று தமிழ்நாட்டிலுள்ள அனைத்து நியாய விலை கடைகளிலும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இருப்பினும், இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள நியாய விலை கடைகளை தவிர்த்து, மற்ற அனைத்து இடங்களிலும் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறவுள்ளது. கைவிரல் ரேகை எனவே, இதுவரை, ரேஷன் கடைகள் மூலம் கைவிரல் ரேகைப்பதிவு செய்யப்படாமல் விடுபட்டுள்ள ரேஷன் அட்டைதாரர்கள் இன்று மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் நடைபெறும் சிறப்பு முகாமினை பயன்படுத்தி தங்களது கைவிரல் ரேகை பதிவினை மேற்கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/fingerprint-registration-special-camp-tamil-nadu-ration-shops-today




