விசாகப்பட்டினம்: பூஜை விடுமுறையை முன்னிட்டு ரெயில்களில் ஏற்படும் பயணிகள் கூட்டத்தை சமாளிக்கும் வகையில், விசாகப்பட்டினம் - பெங்களூரு இடையே சிறப்பு ரெயில்களை இயக்க தெற்கு கடற்கரை ரெயில்வே அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- சிறப்பு ரெயில் அதன்படி, விசாகப்பட்டினம் - எஸ்.எம்.வி.டி. பெங்களூரு சிறப்பு ரெயில் (08583), காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக இயக்கப்படும். இந்த ரெயில் விசாகப்பட்டினத்தில் இருந்து அக்டோபர் 6, 13, 20, 27 ஆகிய தேதிகளிலும், நவம்பர் 3, 10, 17, 24 ஆகிய தேதிகளிலும் இரவு 7 மணிக்கு புறப்படும். மறுநாள் மதியம் 12.45 மணிக்கு எஸ்.எம்.வி.டி. பெங்களூரு சென்றடையும். மறுமார்க்கமாக (08584) இந்த ரெயில் எஸ்.எம்.வி.டி. பெங்களூருவில் இருந்து அக்டோபர் 7, 14, 21, 28 ஆகிய தேதிகளிலும், நவம்பர் 4, 11, 18, 25 ஆகிய தேதிகளிலும் மாலை 3.50 மணிக்கு புறப்படும். மறுநாள் மதியம் 1.30 மணிக்கு விசாகப்பட்டினம் சென்றடையும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/india/special-train-between-visakhapatnam-bengaluru-2




