கடலூர், பிணமாக மிதந்தாள். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பாலி கிராமத்தை சேர்ந்தவர் தனக்கண்ணு மகன் கவிதாஸ் (வயது 26). ஐ.டி.ஐ. படித்துவிட்டு டிராக்டர் ஓட்டி வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் சங்கர் மகள் கிருஷ்ணவேணி (23). இவர் பி.எஸ்சி., பி.எட்., படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். இவரும், கவிதாசும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 23-ந்தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற கிருஷ்ணவேணி, பின்னர் திரும்பி வரவில்லை. இதுபற்றி அவரது தாய் சாந்தி, எடைக்கல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இந்நிலையில் கிருஷ்ணவேணி நேற்று பாலிகிராமத்தில் உள்ள அவரது உறவினரின் கிணற்றில் பிணமாக மிதந்ததை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். காதலன் தற்கொலை இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் எடைக்கல் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, அவரது உடலை மீட்டனர். அங்கு வந்த அவரது குடும்பத்தினர் கிருஷ் ணவேணியின் உடலை பார்த்து கதறி அழுதனர். தொடர்ந்து, கிருஷ்ணவேணியின் உடலை கைப்பற்றி உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் அவரது இறப்புக்கான காரணம் குறித்தும் தீவிர விசா ரணை நடத்தி வருகிறார்கள். இதனிடையே, தனது காதலியின் பிரிவை கவிதாசின் மனம் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த அவர், கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள மங்கலம் பேட்டை காட்டுப்பரூர் கிராமத்திற்கு வந்துள்ளார். அங்குள்ள விவசாய நிலத்தில் சோகத்துடன் காணப்பட்ட அவர், திடீரென அங்கு இருந்த மரத்தில் நேற்று காலை தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். தீவிர விசாரணை இதுபற்றி தகவல் அறிந்த மங்கலம்பேட்டை போலீஸ் இன்ஸ் பெக்டர் பழனிசாமி தலைமையிலான போலீசார் சம்பவ இடத் துக்கு விரைந்து சென்று, பிரேதத்தை கைப்பற்றி விருத்தாச லம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியதால் இந்த தற்கொலை முடிவை அவர்கள் எடுத்தார்களா? அல்லது வேறு ஏதேனும் பிரச்சி னையா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/girlfriend-found-dead-floating-in-a-well-boyfriend-commits-suicide




