கோயம்புத்தூர், கோயம்புத்தூர் மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பக வனப்பகுதியை ஒட்டியுள்ள கூமாட்டி மற்றும் நாகரூத் பகுதிகளை சேர்ந்த 3 பள்ளி மாணவர்கள் திடீரென மாயமாகி உள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குளிக்கச் சென்ற மாணவர்கள் பள்ளி நேரத்திற்கு பிறகு, பள்ளிக்கு பின்புறம் உள்ள பகுதிக்கு குளிக்க சென்ற மாணவர்கள் மீண்டும் வீடு திரும்பவில்லை என பள்ளி ஆசிரியர்கள் தகவலை தெரிவித்துள்ளனர். பள்ளி மாணவர்கள் 3 பேர் ஒரே நேரத்தில் மாயமானது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். யானைகள் நடமாட்டத்தால் அச்சம் மாணவர்கள் காணாமல் போன ஆனைமலை வனப்பகுதியில் தற்போது காட்டு யானைகள் கூட்டமாக நடமாடி வருவதால், மாணவர்களின் பாதுகாப்பைக் கருதி வனத்துறையினரும் போலீசாரும் இணைந்து தேடுதல் வேட்டையை முடுக்கிவிட்டுள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/three-school-students-missing-in-anaimalai




