சென்னை, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- ஏற்புடையதல்ல அனைத்து உயிர்களின் அடிப்படை இயக்கத்திற்கும், இயற்கையின் கொடையாக விளங்கும் நீர்வளத்தைத் தன்னிச்சையாக வர்த்தகப் பொருளாக மாற்றுவது சகித்துக்கொள்ள முடியாத அத்துமீறலாகும். பன்னாட்டு ஏகபோகச் சுரண்டலில் ஈடுபட்டு, உலக அரங்கில் பல்வேறு இறையாண்மை மிக்க நாடுகளால் துரத்தியடிக்கப்பட்ட 'சூயஸ்' (Suez) நிறுவனத்திற்குத் தமிழக மண்ணில் சென்னை, சேலம் உள்ளிட்ட பல மாவட்டங்களில், சிவப்புக் கம்பள வரவேற்பு அளிப்பது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல. நேரடித் தாக்குதல் குடிநீர் விநியோகக் கட்டமைப்பைப் பன்னாட்டு முதலாளித்துவத்தின் வசம் ஒப்படைப்பது, தமிழ் குடிகளின் வாழ்வுரிமை மீது தொடுக்கப்படும் நேரடித் தாக்குதலாகும். இந்நிறுவனத்தின் ஊடுருவல் என்பது ஏழை, எளிய மக்களின் அன்றாட வாழ்வாதாரத்தை நசுக்குவதாகவே அமையும். இனிவரும் காலங்களில் நம் மக்கள் தங்களின் தாகத்தைத் தணித்துக் கொள்ளும் ஒவ்வொரு துளி நீருக்கும் பெருந்தொகையைக் விலையாகச் செலுத்த வேண்டிய அவலநிலைக்குத் தள்ளப்படுவார்கள். அநீதி நீர் என்பது சந்தையில் விற்கப்படும் நுகர்வுப் பண்டமல்ல. அது நமது மக்களின் பிரிக்க முடியாத உயிராதாரம். அதைத் தாராளமயமாக்கும் அதிகாரம் எவருக்கும் இல்லை. எனவே, இந்த விவகாரத்தில் முதல்-அமைச்சர் விஜய் உடனடியாகத் தலையிட்டு, மக்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் இந்த அநீதியான சூயஸ் ஒப்பந்தத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் எனத் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/is-water-the-right-of-the-people-of-tamil-nadu-or-a-business-for-multinational-corporations-velmurugan




