வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி உள்நாட்டு சுற்றுலாப்பயணிகளும் அதிக எண் ணிக்கையில் செல்லும் இடங்களில் ஒன்றாக கோவா திகழ்கிறது. அதன் அழகிய நிலப்பரப்பு, நீண்ட கடற்கரைகள், மணல் நிறைந்த கடல் பகுதிகள், பாரம்பரி யக் கட்டிடக்கலை, கோலாகலமாக கொண்டாடப்படும் திருவிழாக்கள், நீர் விளையாட்டுகள். இரவு நேரக்கொண்டாட்டங்கள் உள்ளிட்ட அம்சங்கள் கோவாவை முழுமையான சுற்றுலா தலங்களாக மாற்றிவிட்டன. 'இந்தியாவின் சுற்றுலா தலைநகரம்' என்ற பெருமையை பெற வழிவகை செய்துவிட்டன. என்ன காரணம்? சுற்றுலா உள்கட்டமைப்பு விரிவடைந்ததாலும், பார்வையாளர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்ததாலும், 20-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இந்தியாவின் சுற்றுலா தலைநகரம் என்ற அங்கீகாரத்தை கோவா பெற்றது. மேம்பட்ட விமான போக்குவரத்து இணைப்பு. கடற் கரை பகுதிகளில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் பொழுதுபோக்கு அம்சங்களை நிறுவுதல் மற்றும் உலகளாவிய அங்கீகாரம் ஆகியவை கோவாவை இந்தியாவின் பிரபலமான ஓய்வுக் கால சுற்றுலாத்தலமாக உருவெடுக்க உதவின. எங்கே அமைந்துள்ளது? இந்தியாவின் மேற்குக்கடற்கரையில் அரபிக்கடலையொட்டி கோவா அமைந்துள்ளது. இதன் வடக்கே மராட்டிய மாநிலமும், தெற்கு மற்றும் கிழக்கே கர்நாடகாவும் எல்லைகளாக உள்ளன. பரப்பளவில் இந்தியாவின் மிகச்சிறிய மாநிலமாக இருந்தாலும், நாட்டிலேயே அதிக அளவில் பார்வையிடப்படும் சுற்றுலா தலங்களில் ஒன்றாக கோவா இருப்பது சிறப்பம்சம். கோவாவில் உள்ள முக்கியச் சுற்றுலாத் தலங்கள் பாகா, கலங்குட். அஞ்சுனா. வாகேட்டர் மற்றும் பாலோலெம் போன்ற கடற்கரைகள் கோவா வின் முக்கிய அடையாளங்களாக விளங்குகின்றன. யுனெஸ்கோவால் பட்டியலிடப்பட்ட தேவா லயங்கள், வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்டைகள், படகு சவாரி, மசாலா பொருட்கள் விளை யும் தோட்டங்கள், வனவிலங்கு சரணாலயங்கள், இன்பமயமான இரவு நேர பொழுதுபோக்கு அம்சங்கள், ஆண்டு முழுவதும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் கலாசார விழாக்கள் உள் ளிட்டவையும் கோவாவை நோக்கி பலரையும் படையெடுக்க வைக்கின்றன. கோவாவின் பொருளாதாரம் கோவாவின் பொருளாதாரத்தில் சுற்றுலா முக்கிய பங்கு வகிக்கிறது. ஓட்டல்கள், போக்குவ ரத்து, உணவு சேவைகள், கைவினைப் பொருட்கள் விற்பனை என பலதரப்பட்ட மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி கொடுக்கிறது. கோவா மாநில அரசாங்கத்தின் வருமானத்திற்கு கணிசமாகப் பங்களிப்பதோடு, உள்ளூர் மக்களில் பெரும்பாலானோர் நேரடியாகவோ அல் லது மறைமுகமாகவோ சுற்றுலா தொடர்பான விஷயங்கள் மூலம் வருமானம் ஈட்டுகிறார்கள். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/sirappukatturaigal/goa-the-tourist-capital-of-india




