கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவி நித்யபாரதி, கையில் தேசிய கொடியை ஏந்தியபடி தொடர்ந்து 3 மணி நேரம் 29 நிமிடங்கள் நீரில் மிதந்து அசத்தியுள்ளார். கல்லூரி மாணவி நித்யபாரதி கிருஷ்ணகிரி மாவட்டம் வெங்கடாபுரம் பஞ்சாயத்துக்குட்பட்ட கே.ஏ. நகரை சேர்ந்தவர் ராமன். இவரது மனைவி வள்ளியம்மாள். இவர்களது மகள் நித்யபாரதி. நாமக்கல்லில் உள்ள தனியார் கல்லூரியில் ரோபோடிக்ஸ் பிரிவில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். 3 மணி 29 நிமிடங்கள் இந்நிலையில், நீச்சல் குளத்தில் கையில் தேசிய கொடியை ஏந்தியபடி தொடர்ந்து 3 மணி நேரம் 29 நிமிடங்கள் நீரில் மிதந்து நித்யபாரதி அசத்தியுள்ளார். காலை 8 மணிக்கு தொடங்கி, தொடர்ந்து 11.29 மணி வரை நீரில் மிதந்து அசத்தினார். சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசியக் கொடியுடன் மேற்கொண்ட இந்த முயற்சி பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. மாணவியின் சாதனை முயற்சியை பாராட்டி பொதுமக்கள் மற்றும் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/college-student-impresses-by-floating-in-water-for-3-hours-and-29-minutes-while-holding-the-national-flag



