சென்னை, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- ஓணம் பண்டிகையை முன்னிட்டு, திருவனந்தபுரத்திற்கு 3 சிறப்பு ரெயில் சேவைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன் விவரம் வருமாறு:- * கர்நாடக மாநிலம் யஷ்வந்த்பூரில் இருந்து இன்று (21-ந்தேதி) இரவு 8.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண்.06573), சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர் வழியாக மறுநாள் மதியம் 1.30 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கு ரெயில் நிலையம் சென்றடையும். மறுமார்க்கமாக, திருவனந்தபுரம் வடக்கு ரெயில் நிலையத்தில் இருந்து நாளை (22-ந்தேதி) மாலை 3.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06574), மேற்கண்ட வழித்தடம் வழியாக மறுநாள் காலை 9.45 மணிக்கு யஷ்வந்த்பூர் சென்றடையும். * பெங்களூருவில் இருந்து நாளை (22-ந்தேதி) மாலை 4.40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06575), சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர் வழியாக மறுநாள் காலை 10 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கு ரெயில் நிலையம் வந்தடையும். மறுமார்க்கமாக, திருவனந்தபுரம் வடக்கு ரெயில் நிலையத்தில் இருந்து நாளை மறுநாள் (23-ந்தேதி) மதியம் 12.40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06576), மேற்கண்ட வழித்தடம் வழியாக மறுநாள் அதிகாலை 5.15 மணிக்கு பெங்களூரு சென்றடையும். * பெங்களூரு கண்டோன்மென்டில் இருந்து வருகிற 28-ந்தேதி மாலை 4.40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06579), சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர் வழியாக மறுநாள் காலை 10.30 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கு ரெயில் நிலையம் வந்தடையும். மறுமார்க்கமாக, திருவனந்தபுரம் வடக்கு ரெயில் நிலையத்தில் இருந்து வருகிற 29-ந்தேதி மதியம் 12.40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06580), மேற்கண்ட வழித்தடம் வழியாக மறுநாள் அதிகாலை 5.15 மணிக்கு பெங்களூரு கண்டோன்மென்ட் சென்றடையும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/onam-festival-southern-railway-announces-3-special-trains-to-thiruvananthapuram




