சென்னை ”ஆடி மாதம் நாளை பிறக்கிறது. இதையொட்டி அம்மன் கோவில்களில் கூழ் ஊற்றுதல், பொங்கல் வைப்பது, தீமிதி திருவிழா உள்ளிட்டவை வெகு விமர்சையாக நடக்கும். இதை முன்னிட்டு கோயம்பேடு பூ மார்க்கெட்டில் அதிகாலை முதலே சில்லரை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வரத்து அதிகரித்து காணப்பட்டு பூ விற்பனையும் விறுவிறுப்பாக நடந்தது. வரத்து குறைவால் கடந்த சில நாட்களாகவே சாமந்தி பூ ஒரு கிலோ ரூ.180 முதல் ரூ.240வரை விற்கப்பட்டது. மேலும் படிக்க: இந்த நிலையில் அதன் விலை மேலும் அதிகரித்து உள்ளது. இன்று ஒரு கிலோ சாமந்தி பூ ரூ. 350 வரை விற்கப்பட்டு வருகிறது. அதேபோல் பன்னீர் ரோஜா ஒரு கிலோ ரூ.120 க்கும், சாக்லேட் ரோஜா ஒரு கிலோ ரூ.160-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெளி மார்கெட்டில் உள்ள பூக்கடைகளில் சாமந்தி பூ ஒரு கிலோ ரூ.500வரை விற்கப்படுகிறது. பூ மொத்த வியாபாரி ஒருவர் கூறும்போது: ஆடி மாதம் கோவில் திருவிழாக்கள் அதிகளவில் நடக்கும். மேலும் ஆடி பூரம், ஆடி பெருக்கு என அடுத்தடுத்து விஷேச நாட்கள் வருவதால் இனி வரும் நாட்களில் பூ விற்பனை சூடு பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார். கோயம்பேடு மார்க்கெட்டில் பூ விற்பனை விபரம் (கிலோவில்) வருமாறு:- மல்லிகை ரூ.600, கனகாம்பரம்- ரூ.700, அரளி - 5.250, செவ்வரளி- ரூ.400, முல்லை- ரூ.500, ஜாதி - 5.500, சம்பங்கி-ரூ.100. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/flower-prices-at-the-koyambedu-flower-market-have-skyrocketed




