திருத்தணி, திருத்தணி முருகன் கோவிலுக்கு ஆட்டோக்கள் செல்ல 8 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. திருத்தணி முருகன் கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், அண்டை மாநிலங்களிலிருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில், தொடர்ந்து காந்தி ஜெயந்தி மற்றும் பல்வேறு விழா நாட்களில் கோவிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தர உள்ளனர். இதையொட்டி, பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு, அக். 2,4,11,18,19,20,25 மற்றும் 27 ஆகிய தேதிகளில் மலைக்கோவிலுக்கு ஆட்டோக்கள் செல்ல கோவில் நிர்வாகம் தடை விதித்துள்ளது. பக்தர்கள் ஒத்துழைப்பு மேலும், மலைக்கோவில் பகுதியில் உள்ள இடவசதிக்கு ஏற்ப கார்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மலைக்கோவில் நுழைவுப் பகுதியில் இருந்து படா செட்டிகுளம் வரை பக்தர்கள் கட்டணமின்றி கோவில் பஸ்களில் பயணம் செய்யலாம். அதேபோல், இருசக்கர வாகனங்களில் வரும் பக்தர்கள் மலைக்கோவிலுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விழா நாட்களில் அதிகளவில் பக்தர்கள் வருகை தர உள்ளதால், போக்குவரத்து ஏற்பாடுகளுக்கு பக்தர்கள் ஒத்துழைப்பு அளிக்குமாறு கோவில் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/autos-banned-from-entering-thirutani-murugan-temple-for-8-days



