Full artikkel
கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூன் 23, 2026), தெலுங்கானா ஐதராபாத்தில் சாலை ஒன்றிற்கு 'டொனால்ட் ட்ரம்ப் அவென்யூ' என்று பெயரிடப்பட்டுள்ளது. அமெரிக்கத் தூதரகம் அமைந்திருக்கும் அந்தச் சாலைக்கு முன்பு, 'அமெரிக்கத் தூதரக சாலை' என்று பெயர் இருந்தது. அதை மாற்றி தான் இப்போது அமெரிக்க அதிபர் ட்ரம்பை குறிக்கும் வகையில் 'டொனால்ட் ட்ரம்ப் அவென்யூ' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தச் சாலை அமைந்திருக்கும் பகுதியில் தான் அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களான கூகுள், அமேசான், மைக்ரோசாப்ட் நிறுவனங்கள் இடம்பெற்றிருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. சாலை பெயர் திறப்பு விழாமீண்டும் ஹார்முஸ் நீர்ச்சந்தியில் ஈரான் - அமெரிக்கா தாக்குதல்: 'முட்டாள்தனம்' - ட்ரம்ப் எதிர்ப்பு சாலைக்குப் புதிய பெயர் வைக்கும் நிகழ்வில் இந்தியாவிற்கான அமெரிக்காவின் சிறப்புத் தூதர் செர்ஜியோ கர் கலந்துகொண்டு பெயர் பலகையைத் திறந்து வைத்தார். பெயர் காரணம் என்ன? இந்தப் பெயர் மாற்றம் குறித்து தெலுங்கானா அரசு, "இது அமெரிக்காவிற்குச் செலுத்தப்படும் ஒரு மரியாதையாகவும், அமெரிக்கா-இந்தியா இடையேயான உறவில் ஹைதராபாத்தின் வளர்ந்து வரும் முக்கியப் பங்கிற்குக் கிடைத்த அங்கீகாரமாகவும் அமைந்துள்ளது" என்று குறிப்பிட்டுள்ளது. ட்ரம்பின் 'நன்றி' சாலைக்கு தனது பெயர் வைத்ததற்கு நன்றி தெரிவித்து ட்ரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில், "இந்தியாவின் ஹைதராபாத்தில் திறக்கப்பட்டுள்ள புதிய 'டொனால்ட் ட்ரம்ப் அவென்யூ' - இந்த வகையில் கௌரவிக்கப்படும் முதலாவது அமெரிக்க அதிபர் நான். மிக்க நன்றி!" என்று பதிவிட்டுள்ளார். ஆதார், பான், பாஸ்போர்ட்டெல்லாம் அல்ல... இவைதான் குடியுரிமைக்கான ஆதாரம்! - மத்திய அரசு சொல்வதென்ன? முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Full artikkel — se lenken under




