சேலம், அணைகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அணைகள் பாதுகாப்பினை மேற்கொள்வதற்காக விரிவான திட்ட மதிப்பீடு மேற்கொள்வதற்கு ஒரு நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. மத்திய நீர்வள ஆணையத்தின் ஓய்வு பெற்ற தலைவர் சந்திரசேகர் அய்யர் தலைமையில் இந்த நிபுணர் குழு அமைக் கப்பட்டுள்ளது. இந்த குழுவில் தமிழக நீர்வளத்துறையின் ஓய்வு பெற்ற தலைமை பொறியாளர் செல்வம், திருச்சி என்.ஐ.டி. கல்லூரியின் புவியியல் தொழில்நுட்ப வல்லுனர் முத்துக்குமரன், நீரியல் வல்லுனர் மஞ்சுளா ஆகி யோர் உறுப்பினர்களாக இடம் பெற்றுள்ளனர். இந்த குழுவினர் நேற்று மேட்டூர் அணையில் ஆய்வு மேற்கொண்டனர். இதுகுறித்து நிபுணர் குழு வின் தலைவர் சந்திரசேகர் அய்யர் நிருபர்களிடம் கூறுகையில், அணைகள் பாதுகாப்பிற்காக விரிவான திட்ட அறிக்கை தயார் செய்வதற்காக மேட்டூர் அணையில் ஆய்வு மேற்கொண்டோம். அணையின் கட்டுமானம், நீர் வெளி யேற்ற மதகுகள், அணையின் முக்கிய பகுதிகள் மற்றும் அணையின் பாது காப்புக்காக அமைக்கப்பட்டுள்ள கருவிகளை ஆய்வு செய்தோம்.மேலும் அணையின் உபரிநீர் போக்கியான 16 கண் மதகு பாலத்தை ஆய்வு செய் தோம். அவசரகால நீர் போக்கியான அணையின் மண் கரையையும் ஆய்வு மேற்கொண்டோம். இதுகுறித்து விரிவான திட்ட அறிக்கையை அரசிடம் தாக்கல் செய்வோம் என்றார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/safety-team-inspects-mettur-dam




