வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகேயுள்ள எர்த்தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் தாமரைச்செல்வி. இவர், குடியாத்தம் நகரக் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வருகிறார். இன்று இரவு பணிமுடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் நெல்லூர்பேட்டை வழியாக வீடு திரும்பிக்கொண்டிருந்த தாமரைச்செல்வி, ஏரிக்கரை அருகே சென்றபோது மறைந்திருந்த அவரது கணவன் அர்வின் தாமரைச்செல்வியை மடக்கி கத்தியால் சரமாரியாக குத்தியதாகக் கூறப்படுகிறது. இந்த கொடூர தாக்குதலில் நிலைக்குலைந்துபோன தாமரைச்செல்வி ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார். ரத்தம் பீறீட்டு கொட்டியதில் காவலர் சீருடையே நனைந்துபோயிருக்கிறது. பெண் போலீஸ் கொடூரக் கொலை இதுபற்றி, தகவல் கிடைத்ததும் போலீஸார் விரைந்து வந்து தாமரைச்செல்வியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர். இதனிடையே, தாமரைச்செல்வியை கொலை செய்ததாகக் கூறப்படும் அவரின் கணவன் அர்வின் தன்னைத் தானே மார்பு பகுதியில் கத்தியால் தாக்கிக்கொண்டு மருத்துவமனையில் அனுமதியானதாகவும் தெரியவந்திருக்கிறது. அவரிடம் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். கொலை செய்யப்பட்ட தாமரைச்செல்விக்கு இரண்டு பிள்ளைகள் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்தச் சம்பவம், வேலூர் மாவட்டத்தில் பேரதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.vikatan.com/crime/female-police-woman-brutally-murdered-in-uniform-husband-commits-heinous-act-shocking-incident-near-vellore




