“WhatsApp-ல Status எப்படி வைப்பது?” என்று அம்மா கேட்க. பக்கத்தில் மகன் இருந்திருந்தால், “இதை இப்படிப் பண்ணுங்கம்மா” என்று சொல்லியிருப்பார். ஆனால், இங்கே அம்மாவுக்குக் கற்றுக்கொடுத்தது ஒரு AI! AI chatbot-ஆன Gemini-யிடம், WhatsApp-ல் Status வைப்பது எப்படி என்று ஒரு பெண் கேட்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்து வருகிறது. இந்த வீடியோவை Instagram பயனர் மோஹித் சர்மா பகிர்ந்துள்ளார். அதில், தனது அம்மா Gemini-யிடம் WhatsApp-ஐ எப்படி திறப்பது என்று கேட்கிறார். உடனே Gemini, திரையின் கீழ்ப்பகுதியில் இருக்கும் Search option-ஐ பயன்படுத்தி WhatsApp என Type செய்யச் சொல்கிறது. WhatsApp திறந்ததும் அடுத்தடுத்த வழிமுறைகளையும் பொறுமையாகச் சொல்லிக் கொடுக்கிறது. முதலில் Updates பகுதிக்குச் செல்ல வேண்டும். பின்னர் புதிய Status பதிவிடுவதற்காக “Add status” அல்லது Camera/Pencil icon-ஐ அழுத்த வேண்டும் என விளக்குகிறது. View this post on Instagram அம்மா Pencil option-ஐ தேர்வு செய்ததும், Gallery-யிலிருந்து புகைப்படத்தைத் தேர்ந்தெடுத்து, Green Arrow-ஐ அழுத்தி Status-ஆக பதிவிடச் சொல்கிறது. ஒருவழியாக Status பதிவாகிவிட்டது! அதைக் கேட்ட Gemini, “நீங்கள் மிகவும் சிறப்பாகச் செய்துள்ளீர்கள்” எனப் பாராட்டுகிறது. இதைப் பார்த்த மோஹித் சர்மா, “அவங்க விரும்பிய மகன் Gemini தான்” என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவைப் பார்த்த பலரும், “சிறிய விஷயங்களில் கிடைக்கும் மகிழ்ச்சி மிகவும் அழகாக இருக்கிறது” எனப் பாராட்டி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.vikatan.com/trending/my-moms-favorite-son-is-gemini-viral-ai-chat-video-melts-hearts



