செங்கல்பட்டு, செங்கல்பட்டில் சாலை தடுப்புச்சுவரில் ஆம்னி பஸ் மோதி விபத்துக்குள்ளானது. பஸ் விபத்து கோவையில் இருந்து சென்னைக்கு இன்று அதிகாலை தனியார் ஆம்னி பஸ் சென்றுகொண்டிருந்தது. அந்த பஸ்சில் 28 பேர் பயணம் செய்தனர். இந்நிலையில், திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே மாமண்டூர் பகுதியில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலை தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் பஸ்சில் பயணித்த பயணிகள் அனைவரும் காயமின்றி நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். அதேவேளை, இந்த விபத்தால் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், போக்குவரத்தை சரிசெய்து விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/chengalpattu-omni-bus-crash-on-road-divider-shocking-incident




