கீவ், உக்ரைன், ரஷியா இடையேயான போர் இன்று 1,610வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே, போர் தொடர்ந்து நீடித்து வருவதால் இரு நாடுகளும் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. ஈரான் கப்பல் மீது உக்ரைன் தாக்குதல் இந்நிலையில், ரஷியாவில் இருந்து ஈரான் புறப்பட்ட சரக்கு கப்பல் மீது உக்ரைன் நேற்று தாக்குதல் நடத்தியுள்ளது. ரஷியாவில் இருந்து ஈரான் நோக்கி காஸ்பியன் கடலில் சென்றுகொண்டிருந்த சரக்கு கப்பல் மீது உக்ரைன் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் ஒரு மாலுமி உயிரிழந்துள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது. மேலும், இந்த தாக்குதலுக்கு ஈரான் கண்டனம் தெரிவித்துள்ளது. அதேவேளை, அமெரிக்காவுக்கு எதிரான போரில் பயன்படுத்த ரஷியாவிடமிருந்து ஈரான் ஆயுதங்களை வாங்கி வருவதாகவும், அந்த ஆயுதங்களே சரக்கு கப்பல்கள் மூலம் ஈரானுக்கு செல்வதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/world/iran-cargo-ship-ukraine-attack




