ஒட்டாவா, பஞ்சாப் மாநிலம் லுதியானா மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் தமந்தீப் கவுர் (வயது 23). இவர் கனடாவின் எட்மொண்டன் நகரில் தங்கி வேலை செய்து வந்தார். இவரும் கனடாவில் வசித்து வரும் டெல்லியை சேர்ந்த ரிதேஷ் குமார் (வயது 22 ) என்ற இளைஞரும் காதலித்து வந்தனர். கொலை இந்நிலையில், எட்மொண்டன் நகரில் கடந்த 9ம் தேதி தமந்தீப் கவுர் தனது வீட்டில் இருந்தார். அப்போது அங்கு வந்த காதலன் ரிதேஷ் குமாருக்கும், தமந்தீப் கவுருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த ரிதேஷ் குமார் காதலி தமந்தீப் கவுரின் கழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்றார். இதில் படுகாயமடைந்த தமந்தீப் கவுர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், தமந்தீப் கவுர் சிகிச்சை பலனின்றி கடந்த 12ம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து, கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார் ரிதேஷ் குமாரை கடந்த புதன்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/world/canada-indian-youth-strangles-girlfriend-to-death




