சென்னை, தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக பல ஆண்டுகளாக கோலோச்சியவரும், தற்போதைய தமிழக முதல்-அமைச்சருமான விஜய், கடந்த 2023-ம் ஆண்டு தமிழக வெற்றிக்கழகம் என்னும் கட்சியை தொடங்கி, அரசியலில் கால்பதித்தார். அதன் தொடர்ச்சியாக மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். கரூர் கூட்ட நெரிசல் அதன்படி மக்களை சந்திக்க கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ந் தேதி அவர் கரூர் மாநகருக்கு வருகை தருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அவரை நேரில் காணும் ஆவலில் அவரது கட்சியினரும், பொதுமக்களும் கலந்துகொண்ட மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட கட்டுக்கடங்காத கூட்டத்தில் குழந்தைகள், பெண்கள் என பலர் சிக்கினர். முடிவில் 41 பேரை இந்த நெரிசல் சம்பவம் பலி கொண்டு கரூரை கண்ணீரில் மூழ்கடித்து விட்டது. கால சுழற்சியில் கூட்ட நெரிசல் சம்பவம் நடைபெற்று ஓராண்டாகி விட்டது. ஆனால் அந்த நெரிசல் சம்பவம் கரூர் மக்கள் மனதில் மறையாத வடுவாக மாறிப்போனது. இதுதொடர்பாக, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற தவெக தலைவர் ஜோசப் விஜய் பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 உயிர்கள் பறிபோன முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று என் நெஞ்சில் குடியிருக்கும் என தனது பேச்சைத் தொடங்கும் தவெக தலைவர் விஜய், தன்னை பார்க்க வந்து கூட்ட நெரிசலில் சிக்கி கொத்து கொத்தாக மடிந்து கொண்டிருந்த நேரத்தில் அதற்கு தார்மீக பொறுப்பேற்காமல் புறமுதுகிட்டு ஓடிவிட்டு தற்போது அப்பெருந்துயரத்தை ஒரு சமூக வலைத்தள பதிவிற்குள் சுருக்க நினைப்பது எவ்வளவு பெரிய அநியாயம்? அஞ்சலி உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட நிவாரணமும், பணிப்பலன்களும் மட்டுமே தீர்வாக அமையாது என்பதோடு, தமிழக மக்களின் மனங்களில் அழியாத ரணமாக பதிந்திருக்கும் பெருந்துயரம் தொடர்பாக சி.பி.ஐ மேற்கொள்ளும் விசாரணையை விரைவுபடுத்தி அதற்கு காரணமானவர்கள் அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுப்பதே உயிரிழந்த 41 பேருக்கும் நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாகும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கரூரில் துயரச் சம்பவம் நிகழ்ந்து ஓராண்டு நிறைவு - நினைவு மட்டுமல்ல நீதியும் உண்மையும் தேவை கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற தவெக தலைவர் திரு ஜோசப் விஜய் அவர்களின் பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 உயிர்கள் பறிபோன முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று என்… — TTV Dhinakaran (@TTVDhinakaran) September 27, 2026 முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/karur-tragedy-marks-one-year-not-just-remembrance-justice-and-truth-are-needed-ttv-dinakaran




